×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சினிமாவை மிஞ்சும் கண்ணீர் பாசப்போராட்டம்.. காதலருடன் புறப்பட்ட மகள்.. கண்ணீரில் கதறிய பெற்றோர்.!

Dindigul Love: பெற்றோரை உதறிவிட்டு இளம்பெண் காதலருடன் புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

மகளுக்கும் - பெற்றோருக்கும் இடையே நடந்த பாசப்போராட்டத்தில் இறுதியில் காதல் வென்றது. ஆனால், வாழ்க்கையின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பெற்றோரின் பயத்துடன் அவர்கள் கண்ணீருடன் புறப்பட்டுச் சென்றார்.

எம்.டெக் பட்டதாரி:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி ஒன்றியம், வி.எஸ். கோட்டை, சில்வார்பட்டியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவரின் மனைவி செல்வி. தம்பதிகளுக்கு 23 வயதுடைய ராஜபிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் எம்.டெக் பட்டதாரி ஆவார். அங்குள்ள வையாளிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராமன். இவரின் மகன் பாலமுருகன் (வயது 25).

இதையும் படிங்க: பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்.. காதலன் பதறவைக்கும் செயல்.. தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.!

காதல் திருமணம்:

பாலமுருகன் - ராஜப்பிரியா இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ராஜபிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ராஜப்பிரியா பாலமுருகனுடன் சென்று மதுரையில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.

பலனில்லை:

இதனைத்தொடர்ந்து, சாணார்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகவே, சமரச பேச்சுவார்த்தை நடத்த பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்பேரில் ரஜாபிரியாவின் பெற்றோர் நேரில் வந்து கண்ணீருடன் மக்களிடம் அழுது புலம்பினர். எதையும் கண்டுகொள்ளாத ராஜப்பிரியா, காதலருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். பெற்றோர் காலில் விழுந்தும் பலனில்லை. 

இதனையடுத்து, சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் ராஜபிரியாவின் விருப்பத்தின்பேரில், அவரது கணவர் பாலமுருகனுடன் அனுப்பி வைத்தார். மேலும், மகள் வீட்டுக்கு தற்போதைய நிலையில் வரமாட்டார் என்பதை உணர்ந்த பெற்றோர் கண்ணீருடன் புறப்பட்டுச் சென்றனர்.
 

இதையும் படிங்க: இன்ஸ்டா காதலை கைவிடாததால் ஆத்திரம்.. தங்கையை அடித்தே கொன்ற சகோதரன்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #Love #பெற்றோர் மகள் #காதல் திருமணம் #சாணார்பட்டி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story