×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவு ராகி களி சாப்பிட்ட கணவன்! காலையில் வாய், மூக்கில் கசிந்த ரத்தம்... சிகிச்சைக்கு பணம் இல்லன்னு சொன்னதும் துடிதுடித்து இறந்த கணவர்..! பிரேதப் பரிசோதனையில் அம்பலமான மனைவி போட்ட மாஸ்டர் பிளான்..!!!

கிருஷ்ணகிரி தளி அருகே குடிப்பழக்கம் மற்றும் குடும்பத் தகராறால் கணவருக்கு ராகி களியில் விஷம் கலந்து கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டார்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு கொலை சம்பவத்தில் முடிந்துள்ளது. வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்காமல், மனைவியின் சம்பளத்தையும் பறித்துச் சென்ற கணவரை, ராகி களியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக 32 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய தளி காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (35), டெம்போ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி முனிரத்னா (32), தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதையும் படிங்க: விடுமுறைக்கு வந்த கணவனிடம் மாட்டிக்கிட்ட மனைவி! இரவு நேர வீடியோ கால்...! பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த சர்ச் பாதிரியார்.. ஆடியோ ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்த கணவர்..! அதிர்ச்சி சம்பவம்..!!!

மகேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் மது அருந்திவிட்டு வந்ததுடன், மனைவி சம்பாதிக்கும் பணத்தையும் பறித்துச் சென்னறுள்ளார். இதனை முனிரத்னா தட்டிக்கேட்டபோது, அவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட முனிரத்னா, கடந்த நவம்பர் 13-ம் தேதி இரவு வீட்டில் தயாரித்த ராகி களியில் விஷ மாத்திரைகளைக் கலந்து மகேஷுக்கு கொடுத்துள்ளார்.

சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற கணவரை வீட்டிற்கு திரும்ப அழைத்தார்

விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மறுநாள் காலை மகேஷுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது அண்ணன், தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தார். கணவர் வீட்டிலேயே இறந்துவிடுவார் என நினைத்து வேலைக்குச் சென்ற முனிரத்னா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்துள்ளார்.

கணவர் உயிர் பிழைத்தால் விஷம் கலந்தது தெரியவந்துவிடும் என அஞ்சிய அவர், சிகிச்சைக்குப் பணம் இல்லை என்று கூறி மகேஷை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். மகேஷின் அண்ணன் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறியும், அதனை முனிரத்னா ஏற்கவில்லை. இதையடுத்து கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில், மகேஷின் வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனையில் விஷம் உறுதி; மனைவி கைது

மகேஷின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை அறிக்கையில் மகேஷ் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து முனிரத்னாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் ராகி களியில் விஷம் கலந்து கணவரைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து முனிரத்னாவைக் கைது செய்த தளி காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

 

இதையும் படிங்க: இறைவனின் கிருபையா..! வீட்டில் வைத்து வழிபட்ட மாதா சிலையின் கன்னத்திலிருந்து வடிந்த எண்ணெய் திரவம்..! சிலுவையை பார்வையிட திரண்ட கிராம மக்கள்..! மெய்சிலிர்க்க வைக்கும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கிருஷ்ணகிரி கொலை #தளி காவல்துறை #முனிரத்னா கைது #கணவருக்கு விஷம் #Crime News Tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story