விடுமுறைக்கு வந்த கணவனிடம் மாட்டிக்கிட்ட மனைவி! இரவு நேர வீடியோ கால்...! பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த சர்ச் பாதிரியார்.. ஆடியோ ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்த கணவர்..! அதிர்ச்சி சம்பவம்..!!!
காயல்பட்டினத்தில் மனைவி மற்றும் ஆலயப் பாதிரியார் தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில், மனைவி மற்றும் ஆலயப் பாதிரியார் தொடர்பாக கணவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்சினை, தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது. பாதிரியார் தொடர்பாக வெளியான ஆடியோவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
செல்போனை ஆய்வு செய்ததில் சந்தேகம்
காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியைச் சேர்ந்த யுனோக், அதே பகுதியைச் சேர்ந்த டெஸ்ஸி என்ற இளம்பெண்ணை 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் செல்வ மாதா ஆலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, ஜூன் மாதம் யுனோக் கப்பல் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில், விடுமுறையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளார், அதில், செல்வ மாதா ஆலயப் பாதிரியார் ஷிவாகருடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், இரவு நேரங்களில் வீடியோ அழைப்பில் பேசியதாகவும் யுனோக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மனைவியிடம் வாக்குவாதம் செய்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ
யுனோக் வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, டெஸ்ஸி பாதிரியார் ஷிவாகருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களுக்குள் இருந்த நெருக்கம் கணவருக்குத் தெரிந்துவிட்டதாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பாதிரியார் பதற்றத்துடன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதற்கிடையே, பாதிரியார் மீது யுனோக் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக நினைத்த ஊர்க்காரர்கள் சிலர் அவரது வீட்டைத் தாக்கி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊர் பெரியவர்களிடம் யுனோக் முறையிட்டுள்ளார். பஞ்சாயத்து மூலம் பேசி தீர்வு காணலாம் எனக் கூறப்பட்ட நிலையில், மூன்று நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகநேரி போலீசார் விசாரணை
இதனால், நண்பர்களுடன் பாதிரியாரின் வீட்டுக்குச் சென்று பேச முயன்ற யுனோக், உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறக்காததால் திரும்பியுள்ளனர் . இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் எழுந்ததில் இருந்து பாதிரியார் ஷிவாகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை குற்றமற்றவர் என நிரூபிக்க பாதிரியார் சபை முயற்சித்து வருவதாகவும் யுனோக் குற்றம் சாட்டியுள்ளார். புகார், வெளியான ஆடியோ மற்றும் செல்போன் தொடர்பான ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சற்று முன்... கடன் தள்ளுபடி...! 24,301 கடன் பெறுநர்களுக்கு... தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!