கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. நண்பர்கள் பலி., உற்சாக பயணத்தில் நேர்ந்த விபரீதம்.!
Krishnagiri News: கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நண்பர்களின் இனிய பயணத்தில் ஏற்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நண்பர்கள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் முருகன். இவரின் மகன் சதீஷ் (வயது 22), கார் ஓட்டுநராக இருக்கிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மகன் அசோக் குமார் (வயது 24), முருகன் என்பவரின் மகன் திவாகர் (வயது 18), குமார் என்பவரின் மகன் திருப்பதி (வயது 22), அன்பழகனின் மகன் திருப்பதி (வயது 22). இவர்கள் ஐவரும் நண்பர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டை.. ஓடும் காரில் மாறி-மாறி சதக்., சதக்.. பறிபோன உயிர்.!
காரில் பயணம்:
இவர்கள் ஐவரும் நேற்று முன்தினம் இரவில் கிருஷ்ணகிரி நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தனர். இவர்களிவாகனம் அரசு பொறியியல் கல்லூரி மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த லாரி காரின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கா, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
படுகாயம்:
இந்த விபத்தில் நண்பர்கள் ஐவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், இவர்களை மீட்டு அவசர ஊர்தி உதவியுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்தடுத்து மரணம்:
இதில் அன்பழகனின் மகன் திருப்பதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அசோக் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற மூவரும் மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Krishnagiri News: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பள்ளிமுடிந்து வரும்போது கொடூரம்.. மூவர் கும்பல் கொடூர செயல்.!