கணவன் - மனைவி சண்டை.. ஓடும் காரில் மாறி-மாறி சதக்., சதக்.. பறிபோன உயிர்.!
ஓடும் காரில் நடந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதியிடையேயான சண்டையில் ஓடும் காரில் நடந்த கத்திக்குத்து காரணமாக மனைவி உயிரிழந்தார்.
தம்பதி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம், ஜோதிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரின் மகள் பிரேமா (வயது 28). சின்னபெலகொண்டப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் வேங்கடசாமி. இவரின் மகன் எல்லப்பா (வயது 32). தம்பதிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: Krishnagiri News: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பள்ளிமுடிந்து வரும்போது கொடூரம்.. மூவர் கும்பல் கொடூர செயல்.!
கருத்து வேறுபாடு:
தம்பதிகளுக்கு தனுஷ் (வயது 11), வெற்றி (வயது 8) என்ற 2 மகன்களும், லக்சயா (வயது 10) என்ற மகளும் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, இவர்களுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் கிருஷ்ணகிரியில் செயல்படும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தவாறு படிக்கிறார்கள். சிறுமி தந்தையின் பராமரிப்பில் இருக்கிறார்.
காவல் நிலையத்தில் புகார்:
தற்போது பிரேமா தந்தையின் வீட்டில் வசித்து வரும் நிலையில், கடந்த 14 ம் தேதி எல்லப்பா மீது ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக மனைவி புகார் அளித்தார். இதன்பேரில் அதிகாரிகள் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கணவரை குடும்பத்தினர் & அதிகாரிகள் முன்னிலையில் செருப்பால் பிரேமா அடித்துள்ளார்.
எழுதிக்கொடுத்தனர்:
சமரசத்துக்குப்பின் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்துவிட்டு புறப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக இவர்கள் பிரேமாவின் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆகஸ்ட் 30 ல் மகன் தனுஷுக்கு பிறந்தநாள் என்பதால், புத்தாடை வாங்க இருவருமாக நேரில் புறப்பட்டுள்ளனர். பின் மகன்களுக்கு துணிகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.
திரைப்பட பாணியில்..
இரவில் இவர்கள் காரில் வந்துகொண்டு இருந்தபோது தகராறு உண்டாகவே, அங்கிருந்த கத்தியை எடுத்து கணவரை பிரேமா குத்தி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியான எல்லப்பா, கத்தியை பிடுங்கி பிரேமாவின் வயிறு, தொடை, முதுகு, கையில் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஓடும் காரிலேயே பிரேமாவின் உயிர் பறிபோனது. அவரது உடலை ஓடும் காரிலிருந்து கீழே தள்ளிய எல்லப்பா, காவல் நிலையம் சென்று விபரத்தை தெரிவித்து சரணடைந்தார். மருத்துவ சிகிச்சைக்குப்பின் எல்லப்பா கைது செய்யப்பட்டார். திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவனை போட்டுத்தள்ளி கபடநாடகம்.. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி பகீர் செயல்.. பரபரப்பு தகவல்.!