கணவனை போட்டுத்தள்ளி கபடநாடகம்.. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி பகீர் செயல்.. பரபரப்பு தகவல்.!
Krishnagiri News: கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை செய்யப்பட்டார்.
கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
தம்பதி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி, குண்டுகுறுக்கி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 39). இவர் விவசாயி ஆவார். இவரது மனைவி ரூபா (வயது 38). தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் 25 ம் தேதி இரவு நேரத்தில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கிராமத்தின் மின்வாரிய அலுவலகம் அருகில், ராஜகோபால் தலையில் படுகாயத்துடன் சடலமாக இருந்தார்.
இதையும் படிங்க: பெண் பூ வியாபாரிக்கு நேர்ந்த சோகம்.. குடும்ப பிரச்சனையில் மகன் செய்த பயங்கரம்.!
விபத்து நாடகம்:
இவரது உடலுக்கு அருகில் இருசக்கர வாகனம் இருந்த நிலையில், ரூபா சூளகிரி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் விபத்தில் இறந்திருக்கலாம் என புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
சந்தேகம்:
இந்த சிசிடிவி காட்சிகளில் ராஜகோபாலுடன் ரூபாவும் இருசக்கர வாகனத்தில் சென்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், கணவருடன் செல்லாததுபோல மறுநாளே ரூபா ஏன் வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்படவே, ரூபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அதிர்ச்சி தகவல் வெளியானது.
கள்ளக்காதல்:
அதாவது, சூளகிரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ரூபா வேலை பார்த்து வந்த போது, உடன் வேலை பார்த்து வந்த ஓட்டையனூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 34) என்பவருடன் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த ராஜகோபால் கண்டிக்கவே, கணவன் - மனைவி பிரச்சனை உண்டாகி இருக்கிறது.
கொலை:
இந்த விஷயம் குறித்து கள்ளக்காதலன் நந்தகுமாரிடம் ரூபா தெரிவிக்க, ராஜ கோபாலை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி சம்பவத்தன்று மனைவி உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்த, மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வந்தபோது, நந்தகுமார் பின்தொடர்ந்து வந்து ராஜ கோபாலை தாக்கிவிட்டு கொலை செய்து சென்றுவிட்டார். பின் ரூபாவையும் அவரின் வீட்டில் விட்டுள்ளார். கொலைக்குப்பின் விபத்து நாடகமாடிய நிலையில் உண்மை அம்பலமானதும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதை அட்டகாசம்.. புகார் அளித்ததால் இளைஞர் குத்திக்கொலை.. ராஜபாளையத்தில் கொடூரம்.!