கடப்பாரையால் தாக்கி மனைவி கொடூர கொலை.. நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.!
Krishnagiri News: நடத்தை சந்தேகத்தில் மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
மனைவியின் மீது சந்தேகப்பட்ட கணவர் செய்த பயங்கரம் 4 குழந்தைகளை தவிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
தம்பதிகள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கம்மம்பள்ளி, ஜேட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 42). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாலூரில் செயல்படும் தாபா ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். ரமேஷின் மனைவி ராஜேஸ்வரி (வயது 35). தம்பதிகளுக்கு 2 மகன், 2 மகள்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த சமரச பேச்சு.. ஊர் மக்கள் முன்னிலையில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.!
தகராறு:
இதனிடையே, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரமேஷ், அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மாலை நேரத்தில் மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போது, ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவியை கடப்பாரையால் தாக்கி இருக்கிறார்.
கொலை:
இந்த சம்பவத்தில் ராஜேஸ்வரி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரின் தாய் ருக்கம்மாள், அக்கம் பக்கத்தினரிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். பின் இதுதொடர்பாக மகாராஜக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது:
தகவலை அறிந்ததும் நேரில் வந்த அதிகாரிகள் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இப்படியெல்லாமா பண்ணுவீங்க? ரூ.100க்காக சண்டை.. பெட்ரோலால் பதில் சொன்ன மனைவி.. பறிபோன உயிர்.!