இப்படியெல்லாமா பண்ணுவீங்க? ரூ.100க்காக சண்டை.. பெட்ரோலால் பதில் சொன்ன மனைவி.. பறிபோன உயிர்.!
மதுபோதை கணவனால் பெண்ணின் வாழ்க்கை சிறையில் தள்ளப்பட்டுள்ளது.
மதுபானம் அருந்திவிட்டு அவமானப்படுத்திய கணவரை ஆத்திரத்தில் கொளுத்திவிட்டு கொலை செய்த மனைவியின் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தம்பதிகள்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டம், தாராப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் அவதேஷ் (வயது 49). இவன் மனைவி பிரீத்தி தேவி (வயது 45). தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.
இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!
மதுபோதை:
மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவதேஷ், நேற்று இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, ரூ.100 பணம் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, மனைவியை அவதேஷ் அவதூறாக பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்.
கொளுத்திவிட்டார்:
கணவரின் பேச்சால் ஆத்திரத்தில் இருந்த பிரீத்தி, கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த கணவரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து கரும்புகை வந்ததை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர்.
அதிகாரிகள் விசாரணை:
தகவலை அறிந்து நேரில் வந்த அதிகாரிகள் அவதேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிரீத்தி உண்மையை ஒப்புக்கொள்ளவே, அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்.. கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்.!