தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான 9 வயது மகன்! வீட்டின் கட்டிலுக்கு அடியில் கண்ட அதிர்ச்சி...! பகீர் சம்பவம்...!!!
சென்னை கோயம்பேட்டில் தாயுடன் வசித்த 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான தமிழ்ச்செல்வனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன் வசித்து வந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படும் தமிழ்ச்செல்வன் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க சிஎம்பிடி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தகராறுக்கு பிறகு செல்போனில் மிரட்டல்
கோயம்பேடு நியூ காலனி பகுதியில் 30 வயதான பூவரசி, தனது கணவரைப் பிரிந்து 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். அவருடன் தமிழ்ச்செல்வன் என்பவரும் பழகி வந்ததாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வேறு நபர்களுடன் பேசுவது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: BREAKING: குஷியோ குஷி! 12,692 அரசு பேருந்துகளில் இலவச பயணம்..! வெற்றி பயணம் திட்டத்தை டிக்கெட் கொடுத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்..!!!
சம்பவத்தன்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பூவரசிக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் தனியாக வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பூவரசியை செல்போனில் தொடர்புகொண்டு, அவரது மகனை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
சிறுவனை கொன்றதாக கூறிய நபர்
சிறிது நேரத்தில் மீண்டும் பூவரசிக்கு போன் செய்த தமிழ்ச்செல்வன், 9 வயது சிறுவன் தருணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பூவரசி உடனடியாக வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார்.
கட்டிலுக்கு அடியில் கிடந்த சடலம்
அப்போது சிறுவன் தருண் கொலை செய்யப்பட்ட நிலையில் கட்டிலுக்கு அடியில் சடலமாக கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சிஎம்பிடி காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவான தமிழ்ச்செல்வனை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஷாக்... நோயாளியின் உயிரை குடித்த ஒரே ஒரு ஊசி...! சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் போராட்டம்...!!!