நல்லதுக்கு காலமில்லை..... பி.இ. பட்டதாரி இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! சிக்கிய கடிதத்தில் இருந்த அந்த ஒரு வரி.! கதறும் பெற்றோர்!!!
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜினேஷ் மூர்த்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் ஒன்று மீட்கப்பட்ட நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஜினேஷ் மூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படிப்பு குறித்து வீட்டில் கருத்து வேறுபாடு
அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த முட்டை மொத்த வியாபாரி திருமாலின் மகனான 26 வயதுடைய ஜினேஷ் மூர்த்தி, பி.இ. பட்டப்படிப்பை முடித்த பிறகு தனது தந்தையுடன் இணைந்து குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும் படிக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருந்ததாகவும், அதில் அவருக்கு உடன்பாடு இல்லாததால் வீட்டில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வியைத் தாங்க முடியல... திமுக வட்ட செயலாளர் ஏசுதாஸ் எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
மருத்துவமனையில் உயிரிழப்பு உறுதி
சம்பவத்தன்று இரவு தனது அறைக்குச் சென்ற ஜினேஷ் மூர்த்தி, மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடிதம் குறித்து போலீசார் விசாரணை
இந்த வழக்கில் காவல்துறை விசாரணையின்போது, “எனது உயிரிழப்புக்கு யாரும் காரணமில்லை; பெற்றோருக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை” என்று எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை, அதன் பின்னணி மற்றும் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.