×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலித்து ரகசிய திருமணம் செய்த காதல் ஜோடி! மனைவி தனியாக வாடகை வீட்டில்.... கணவணை இரவு அழைத்த காதலி! No சொன்ன வாலிபர்..... கடைசி மெசேஜ்ஜில் மொத்த காதல் கதையே முடுஞ்சுட்டு!!!

பெங்களூரு புறநகர் நெலமங்கலாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட 31 வயது இளம்பெண் விஷம் அருந்தி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பெங்களூரு புறநகர்ப் பகுதியான நெலமங்கலாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட 31 வயதான இளம்பெண் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

காதல் திருமணத்துக்குப் பிறகு தனியாக வசித்த இளம்பெண்

போலீசார் தெரிவித்த தகவலின்படி, கௌரிபிதனூரைச் சேர்ந்த தனுஜாவும், எலகங்காவைச் சேர்ந்த ரவீந்திராவும் வேலைக்குச் சென்றபோது அறிமுகமாகி காதலித்துள்ளனர். பின்னர் இருவரும் தர்மஸ்தலாவில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரிடம் பின்னர் தெரிவிப்பதாகக் கூறிய ரவீந்திரா, தனுஜாவை எலகங்காவில் உள்ள வாடகை வீட்டில் தனியாக தங்க வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் தோல்வியைத் தாங்க முடியல... திமுக வட்ட செயலாளர் ஏசுதாஸ் எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

விஷம் அருந்திய விவரம் குறுஞ்செய்தியில் தகவல்

சம்பவத்தன்று தனது கணவரை வீட்டிற்கு வருமாறு தனுஜா அழைத்ததாகவும், மறுநாள் காலை வருவதாக ரவீந்திரா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த தனுஜா தனது செல்போனை அணைத்துவிட்டு நெலமங்கலா அருகே உள்ள பசவனஹள்ளிக்குச் சென்று விஷம் அருந்தியுள்ளார். அதுகுறித்து ரவீந்திராவுக்கு " நான் விஷம் குடித்துவிட்டேன் "என குறுஞ்செய்தியும் அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நெலமங்கலா போலீசார் விசாரணை

குறுஞ்செய்தியை பார்த்த ரவீந்திரா உடனடியாக அங்கு சென்று தனுஜாவை மீட்டு நெலமங்கலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக நெலமங்கலா நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: என்னை உடனே பார்க்க வா.... காதலன் கணவனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்! பாசமா இல்ல.. புரிதல் இல்லாத அவசரமா..? புதுமணப் பெண்ணின் விபரீத செயல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bengaluru News #நெலமங்கலா #Young Woman #Suicide case #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story