×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பனை நுங்கில் பாய்ந்த மின்சாரம்.. கல்லூரி மாணவர்கள் துள்ளத்துடிக்க பலியான சோகம்..!

Kanchipuram News: மின்சார கம்பியில் சிக்கிய நுங்கை எடுக்க இரும்பு கம்பி எடுத்து வந்த மாணவர்கள் பலியாகினர். 

Advertisement

கல்லூரி மாணவர்கள் இருவர் அலட்சியமான செயலால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நுங்கு பறித்தனர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், சிறுமாங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் டில்லி கணேஷ் (வயது 17). இவரின் நண்பர் தட்சிணா மூர்த்தி (வயது 17). கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கிராம பகுதியில் இருந்த பனைமரத்தில் ஏறி நுங்கு பறித்துக்கொண்டு இருந்தனர்.

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

மின்கம்பியில் சிக்கியது:

அப்போது, ஒரு நுங்கு தழை மொத்தமாக உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் அதனை எடுக்க இரும்பு கம்பி எடுத்து வந்த மாணவர்கள், நேரடியாக மின்சார கம்பி மீது அதனை வைத்துள்ளனர். அப்போது, இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்றபோது, அவர்கள் கண்முன் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிகாரிகள் அறிவுறுத்தல்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடைகாலத்தில் தென்னை, நுங்கு மரம் ஏறும் நபர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், மின்கம்பியில் சிக்கிக்கொள்ளும் பொருட்களை அலட்சியமான முறையில் எடுக்க முயற்சிக்க கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: எமனாக விழுந்த மின்சார கம்பி.. கல்லூரி மாணவரை காப்பாற்ற முயன்ற பெரியப்பாவும் பரிதாப பலி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #college student #மின்சாரம் #பனை நுங்கு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story