×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னயா நடக்குது இங்க....காரசாரமான விவாதத்தின் போது எ.வ.வேலு சொன்ன அந்த ஒரு வார்த்தை...! குலுங்கி சிரித்த CM விஜய்...! வைரலாகும் வீடியோ...!!!

சட்டசபையில் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு, அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசார விவாதம் நடந்தது.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலுவுக்கும் அமைச்சர் ராஜ்மோகனுக்கும் இடையே சுவாரசியமான வாக்குவாதம் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து தொடங்கிய விவாதம், சட்டசபை மேசை, மைக், நாற்காலி வரை நீண்டது. இருவரின் பதிலடிகளால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு

திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’ தற்போது ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என விரிவாக்கப்பட்டுள்ளதற்கு எ.வ.வேலு எதிர்ப்பு தெரிவித்தார். புதிய திட்டங்களை உருவாக்கி அதற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை வைக்கலாம்; ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: பேரவையில் CM கேட்ட அந்த கேள்வி... அப்பாவை காணோம்? மேடையிலேயே ஸ்டாலின் போட்டுடைத்த உண்மை! இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!!!

மேலும், காமராஜருக்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்து அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது திமுக ஆட்சிதான் என்றும் எ.வ.வேலு சுட்டிக்காட்டினார்.

‘காமராஜர் பெயரைவிட பொருத்தமானது வேறு இல்லை’

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வரிப் பணத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றன என்றார். காலம் காலமாக திமுக ஆட்சியிலும் பல்வேறு அரசுத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதை அவர் நினைவுபடுத்தினார்.

பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்டுவதைவிட பொருத்தமான பெயர் வேறு இருக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியாகத் தெரிவித்தார்.

மேசை, மைக் விவகாரத்திலும் பதிலடி

விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தபோது, சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் கலைநயமிக்க மேசைகள் மற்றும் மைக்குகள் உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தாம் இரவு பகலாக கவனித்து உருவாக்கியதாக எ.வ.வேலு குறிப்பிட்டார்.

உடனே குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், “மேசை, மைக், நாற்காலி அனைத்தையும் செய்தது மக்கள் வரிப் பணத்தில் தமிழக அரசுதானே தவிர தனிநபர் அல்ல” என பதிலடி கொடுத்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சுவாரசியமான வாக்குவாதத்தை கேட்ட முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள் சிரித்தனர். சட்டமன்ற விவாதம் முழுவதும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.

 

இதையும் படிங்க: 2 மாதம் காத்திருந்தோம்... ஆனால் 5 நாளில் நடந்த அதிசயம்! நாங்க சும்மாதான் Try பண்ணோம்.. CM Cell-ஆல் உயிர் பிழைத்த வாலிபர் நெகிழ்ச்சி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#காமராஜர் காலை உணவுத் திட்டம் #எ.வ.வேலு #ராஜ்மோகன் அமைச்சர் #Tamil Nadu Assembly #விஜய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story