×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 மாதம் காத்திருந்தோம்... ஆனால் 5 நாளில் நடந்த அதிசயம்! நாங்க சும்மாதான் Try பண்ணோம்.. CM Cell-ஆல் உயிர் பிழைத்த வாலிபர் நெகிழ்ச்சி.!!!

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாருக்கு ஐந்து நாட்களிலேயே உயிர் காக்கும் மருந்து ஊசிகள் வழங்கப்பட்டதாக இளைஞர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த தகவல் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

உயிர் காக்கும் மருந்து ஊசிகள் கிடைக்காமல் தவித்த நண்பருக்காக முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்த இளைஞருக்கு, ஐந்து நாட்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இரண்டு மாதங்களாக தீர்வு கிடைக்காமல் இருந்த நிலையில், விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாத காத்திருப்புக்கு பிறகு கிடைத்த தீர்வு

நண்பருக்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய உயிர் காக்கும் மருந்து ஊசிகள் கடந்த இரண்டு மாதங்களாக கிடைக்காமல் இருந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் பலன் இல்லாததால், கடைசி முயற்சியாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நள்ளிரவு 12 மணிக்கு முதல்வர் விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..! வதந்திகளுக்கு ஒரே போஸ்ட்டால் முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா...!!!!

ஐந்து நாட்களில் 20 ஊசிகள் அனுப்பப்பட்டதாக தகவல்

புகார் அனுப்பிய ஐந்து நாட்களிலேயே தேவையான 20 மருந்து ஊசிகளும் சம்பந்தப்பட்ட கிடங்கிற்கு அனுப்பப்பட்டதாகவும், அதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து நேரடியாக கடிதம் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விரைவான நடவடிக்கை தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த நன்றி

“சும்மாதான் ஒரு முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. விஜய் சார் சொன்ன மாதிரியே, சொன்னதைச் செய்வார்கள் என்ற பாணியில் உடனடியாக செய்து முடித்திருக்கிறார்கள்,” என்று அந்த இளைஞர் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைப் பகிர்ந்துள்ளார்.

 

இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி காட்டுங்க... தவெக அரசின் டார்கெட்டில் இருக்கும் அடுத்த லிஸ்ட்! ஆதரித்து அண்ணாமலை போட்ட ட்வீட்டால் அதிரும் தமிழக அரசியல்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chief minister #முதலமைச்சர் தனிப்பிரிவு #Life Saving Medicine #விஜய் #Tamil Nadu News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story