×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாம்பு கடித்த துளி தடையமும் இல்லை..! ஆனால்.. கள்ளக்குறிச்சி குழந்தைகளின் மரணத்தில் வெளிவந்த பிரத பரிசோதனையின் ஷாக் ரிப்போர்ட்..!!!

கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து 2 வயது மற்றும் 4 வயது சிறுமிகள் உயிரிழந்த நிலையில், பிரேதப் பரிசோதனையில் கட்டுவிரியன் கடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது மற்றும் 2 வயது சிறுமிகள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் - புஷ்பா தம்பதியின் குழந்தைகளான தேவதர்ஷினி மற்றும் தேவஜனனி கடந்த நவம்பர் 17-ஆம் தேதி இரவு பாம்பு கடித்ததில் பாதிக்கப்பட்டனர். இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தாய் புஷ்பா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய் மற்றும் 2 குழந்தைகளை கடித்த பாம்பு

நவம்பர் 17-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புஷ்பா மற்றும் அவரது இரு குழந்தைகளையும் விஷப்பாம்பு கடித்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரையும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த எமன்! தூக்கத்திலேயே பறிபோன இரு பிஞ்சு உயிர்கள்..! உயிருக்கு போராடும் தாய்.. அதிர்ச்சியில் உறைந்த கள்ளக்குறிச்சி கிராமம்..!!!

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் தேவதர்ஷினி, தேவஜனனி ஆகிய இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். தாய் புஷ்பா மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில் கட்டுவிரியன் கடித்தது உறுதி

முதலில் ஒரு குழந்தையின் உடலில் பாம்பு கடித்ததற்கான வெளிப்படையான தடயங்கள் இல்லாததால், உயிரிழப்புக்கான காரணம் குறித்து சந்தேகம் எழுந்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இரு குழந்தைகளும் கட்டுவிரியன் பாம்பு கடித்ததால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

கட்டுவிரியன் பாம்பு மிகவும் விஷத்தன்மை கொண்டது. இதன் கடி சில நேரங்களில் வெளிப்படையான வீக்கம், வலி அல்லது ரத்தக்கசிவு இல்லாமலேயே பாதிப்பை ஏற்படுத்தலாம். வயிற்று வலி, கண் இமைகள் சோர்வடைதல், பார்வை மங்குதல், பேச்சில் தடுமாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.

பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்

பாம்பு கடித்தவர்களுக்கு தாமதமின்றி மருத்துவ சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். கடித்த இடத்தில் இறுக்கமாகக் கட்டுவது, காயத்தை வெட்டுவது அல்லது வாயால் விஷத்தை உறிஞ்ச முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை அமைதியாக வைத்திருந்து, நடக்கவோ ஓடவோ விடாமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதே உயிரைக் காப்பாற்ற உதவும்.

 

இதையும் படிங்க: வார்த்தை வெளிவராமல் கவனமாக பேசும்... செஞ்சி சிறுமி பெற்றோர்..! 8 மணி நேரக் கிடுக்கிப்பிடி விசாரணை... வீட்டின் ரகசியத்தை முதலில் உடைக்கும் சிபிசிஐடி...! வெளியான திடுக்கிடும் தகவல்கள்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கட்டுவிரியன் பாம்பு #கள்ளக்குறிச்சி குழந்தைகள் #Snake bite #பாம்பு கடி #Kallakurichi News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story