×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வார்த்தை வெளிவராமல் கவனமாக பேசும்... செஞ்சி சிறுமி பெற்றோர்..! 8 மணி நேரக் கிடுக்கிப்பிடி விசாரணை... வீட்டின் ரகசியத்தை முதலில் உடைக்கும் சிபிசிஐடி...! வெளியான திடுக்கிடும் தகவல்கள்...!!!

விழுப்புரம் செஞ்சி அருகே 7 வயது ஹேமலதா மாயமான வழக்கில், அவரது தாயார் பவானியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஒரு மாதத்தைக் கடந்தும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காத நிலையில், அவரது தாயார் பவானியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். குடும்பத்தினரின் வாக்குமூலங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசாரணை புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

தாயாரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி ஹேமலதா, தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: 36 நாட்கள் ஆகிட்டு..! நேற்று தந்தையிடம் 7 மணி நேரம்... இன்று தாயிடம் 7 மணி நேரம்! சிபிசிஐடி-யின் கிடுக்குபிடி விசாரணயில் சிக்கிய அந்த ஒரு உண்மை..! செஞ்சி சிறுமி வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் திருப்பம்!!!

இந்நிலையில், சிறுமியின் தாயார் பவானியை தனியாக அழைத்த சிபிசிஐடி அதிகாரிகள், பல்வேறு கோணங்களில் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் தலைமையில் பெற்றோர் மற்றும் பாட்டியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

வாக்குமூலங்களில் முரண்பாடுகள்

பவானி, அவரது கணவர் வடிவேலு மற்றும் பாட்டி ஆகியோரிடம் பெறப்பட்ட முந்தைய வாக்குமூலங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவு திறந்திருந்தது எப்படி, அருகில் இருந்தவர்கள் கேட்டதாகக் கூறப்படும் குழந்தையின் அலறல் சத்தம் வீட்டில் தூங்கியவர்களுக்கு கேட்காமல் போனது ஏன் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டனவாம்.

சிறுமி காணாமல் போன நேரத்தில் நடந்தவற்றை மீண்டும் விவரிக்கச் சொல்லி அதிகாரிகள் விசாரித்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் வங்கிப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை மையமாகக் கொண்டு விசாரணை

தொடக்கத்தில் சிறுமியை தேடி பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது குடும்பத்தினரின் ரகசியத்தை உடைத்து, வாக்குமூலங்களில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதிலும் சிபிசிஐடி அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிறுமியின் பெற்றோர் வார்த்தை  வெளிவராதவாறு கவனமாக இருவரும் பேசுவதும், சிறுமி உயிருடன் திரும்பி வருவார் என அவரது தாயார் தைரியமாக கூறியதன் பின்னணி குறித்தும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விவரமும் வெளியிடவில்லை. சிறுமி ஹேமலதா எங்கு இருக்கிறார், அவர் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: 31 நாட்கள் ஆகிட்டு...! செஞ்சி சிறுமி வழக்கில் புதிதாக களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி...! விடுப்பட்ட தடயத்தை பிடிக்க நேரடி ஆய்வு...! சிக்கப்போகும் அந்த நபர்..? விசாரணையின் அதிரடி வேகம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹேமலதா மாயம் #செஞ்சி சிறுமி #CBCID Investigation #விழுப்புரம் #Missing Girl Case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story