×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

31 நாட்கள் ஆகிட்டு...! செஞ்சி சிறுமி வழக்கில் புதிதாக களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி...! விடுப்பட்ட தடயத்தை பிடிக்க நேரடி ஆய்வு...! சிக்கப்போகும் அந்த நபர்..? விசாரணையின் அதிரடி வேகம்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் 31 நாட்களாக மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 31 நாட்களாக மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாக ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டில் வசிப்பவர்களிடம் தனித்தனியாகக் கேட்டறிந்த அவர், வீட்டின் பின்புறம் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

பெற்றோர், அண்டை வீட்டுப் பெண்ணிடம் தனித்தனி விசாரணை

ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களான வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் அவர் காணாமல் போனது தெரியவந்தது.

இதையும் படிங்க: சிறுமி மாயத்தில் தொடரும் மர்மம்..! உள்ளூர் ரவுடிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை.. நாளுக்கு நாள் சிபிசிஐடிக்கே திக் திக்..!!!

முதலில் உள்ளூர் போலீசார் சுமார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் விசாரணை நடத்தியும் உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், டிஐஜி விக்ரமன் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார்.

எஸ்பி ஜவகர், டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் உடனிருக்க, சிறுமியின் பெற்றோர் வடிவேலு மற்றும் பவானியிடம் அவர் தனித்தனியாக விசாரணை நடத்தினார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு வீட்டின் கதவு திறந்திருந்தது எப்படி, அன்றிரவு வீட்டில் என்ன நடந்தது, முந்தைய வாக்குமூலங்களில் விடுபட்ட தகவல்கள் உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தார். எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளா என்ற பெண்ணிடமும் அன்றிரவு கேட்ட சத்தங்கள், சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் குறித்து விசாரித்தார்.

முள் புதர்கள், விவசாய நிலங்களில் நேரடி ஆய்வு

விசாரணையைத் தொடர்ந்து, சிறுமியின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள அடர்ந்த முள் புதர்களையும், சம்பவத்தன்று மோப்ப நாய் சென்றதாகக் கூறப்படும் விவசாய நிலப் பகுதிகளையும் அதிகாரிகளுடன் சேர்ந்து டிஐஜி ஆய்வு செய்தார். கிராமத்தைச் சுற்றியுள்ள மண் சாலைகள், வெளியேறுவதற்கான வழித்தடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். ஏற்கனவே நடந்த தேடுதல் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கள ஆய்வு நடத்திய அவர், பின்னர் சிபிசிஐடி முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முந்தைய விசாரணையில் கிடைத்த தகவல்களை மீண்டும் சரிபார்த்து, வழக்கில் விடுபட்ட தடயங்களைக் கண்டறிவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரயில் நிலைய சிசிடிவி, லாரி வழித்தடங்களிலும் ஆய்வு

சிறுமி வெளிமாநிலத்துக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ரயில் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும், நெடுஞ்சாலைகளில் சென்ற லாரிகளின் வழித்தடங்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரை மற்றும் அவரது கூட்டாளிகளின் நடமாட்டம், இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள் ஆகியவற்றையும் தனிப்படையினர் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர். 31 நாட்களாகியும் சிறுமி குறித்து எந்த உறுதியான தகவலும் கிடைக்காததால், டிஐஜியின் நேரடி ஆய்வு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: 26 நாட்களாக நீடிக்கும் மர்மம்! 10 தனிப்படைகள், சிபிசிஐடி விசாரணை... மேல்மலையனூர் கோவிலில் மடிப்பிச்சை ஏந்தி கதறி அழும் தாய்! செஞ்சி சிறுமி வழக்கில் உள்ள மர்மம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹேமலதா மாயம் #சிபிசிஐடி விசாரணை #விழுப்புரம் சிறுமி #Hemalatha Missing Case #CBCID Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story