×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்த முதியவர்.. விழுந்தது தர்ம அடி.. விருதுநகரில் சம்பவம்.!

Sattur News Today: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு தர்ம அடி விழுந்தது.

Advertisement

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

பேருந்து பயணம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உச்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் குமரவேல் (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவில், திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி பயணம் செய்த அரசுப்பேருந்தில் பயணித்துக்கொண்டு இருந்தார். இந்த பேருந்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 10 வந்து சிறுமி இருந்துள்ளார். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

பாலியல் தொல்லை: 

சிறுமி பெற்றோருடன் மதுரை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார். இதனிடையே, பேருந்தின் பின் இருக்கையில் இருந்த குமரவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் முதியவரை எச்சரித்து இருக்கின்றனர். பின் பேருந்து சாத்தூரை கடந்து சென்றபோது, குமரவேல் பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கி இருக்கிறார்.

தர்ம அடி:

இதனையடுத்து, சிறுமி மீண்டும் பெற்றோரிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த பெற்றோர் முதியவரிடம் வாதம் செய்துள்ளனர். பின் பேருந்தில் இருந்த பயணிகளும் விபரத்தை அறிந்துகொண்ட நிலையில், குமரவேலுக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது. பின் பேருந்து வச்சகாரப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்ற நிலையில், முதியவர் காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குமரவேலை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து துணிகரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Sexual Harassment #Virudhunagar #தர்ம அடி #சிறுமியிடம் சில்மிஷம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story