×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து துணிகரம்.!

Tirupattur News: 17 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேசன் (43) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் உமரபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.

Advertisement

சிறுமிக்கு 43 வயதுடைய நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, துத்திப்பட்டு புதுமனை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 43). இவர் துத்திப்பட்டு பகுதியில் சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தி வந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே திடீரென மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர், எப்போதும் போதையில் திரிந்து வந்துள்ளார். 

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

இந்நிலையில், வெங்கடேசன் சம்பவத்தன்று ஆம்பூர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த 17 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் வெங்கடேசனை பிடித்து அடித்து நொறுக்கினர். பின் உமரபாத் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

குடிபோதைக்கு அடிமை:

நேரில் வந்த அதிகாரிகள், வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் நடத்தி வந்தவர், திடீரென குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார். பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழக்கில் சிக்கி இருக்கிறார் என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #sexual abuse #Tirupattur #குற்றம் #பாலியல் தொல்லை #திருப்பத்தூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story