பேரனுக்கு திருமணம் முடிந்ததும் பாட்டி விபத்தில் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த காரால் 2 மூதாட்டிகளுக்கு நேர்ந்த துயரம்.!
பேரனுக்கு திருமணம் முடிந்ததும் பாட்டி விபத்தில் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த காரால் 2 மூதாட்டிகளுக்கு நேர்ந்த துயரம்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, சோங்கலாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 53). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். முருகேசனின் மனைவி உமா மகேஸ்வரி (வயது 50). தம்பதிகளுக்கு தினேஷ் குமார் என்ற மகன் இருக்கிறார்.
இவர் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில், ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பகுதியில் இளம்பெண் வசித்து வருகிறார். தஞ்சாவூர் பெண்ணுக்கும் - முருகேசனுக்கு திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டு, நேற்று உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணம் முடிந்த பின்னர் மணமக்களை தஞ்சாவூர் அனுப்பிய முருகேசன், உமா மகேஸ்வரி, உமாவின் தாய் சரஸ்வதி (வயது 70) காரில் ஊத்துக்குளி நோக்கி பயணம் செய்தனர். இவர்கள் வாகனம் திருப்பூர், நடும்பாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையும் படிங்க: ஹிந்தி திணிப்பை உறுதி செய்தால் ரூ.99 இலட்சம் பரிசு.. திருப்பூர் பாஜக அறிவிப்பு.!
சாலையோரம் தறிகெட்டு ஓடிய கார், மரத்தின் மீது மோதி நின்றது. கார் சாலையோரம் ஓடியது, அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி பெரியம்மாள் (70) என்பவரின் மீது மோத, அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கார் மரத்தின் மீது மோதியதில், சரஸ்வதியும் உயிரிழந்தார்.
பிற இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து அரச்சலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களை விரட்டி-விரட்டி தாக்கிய வடமாநில இளைஞர்கள்? பல்லடத்தில் பயங்கரம்.!