×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலை தேடி வந்த பெண்ணை காட்டுப்பகுதியில் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞன்.. திருப்பூரில் திடுக் சம்பவம்.!

25 Year Old Girl Rape Attempt: 25 வயது இளம்பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சித்த நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

Advertisement

இளம்பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் வந்தார்:

Tiruppur News: கேரளா மாநிலத்தில் வசித்து வரும் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர், வேலை தேடி திருப்பூருக்கு வந்துள்ளார். இவர் ரயிலில் வந்த நிலையில், திருப்பூர் மத்திய பேருந்து நிறுத்தத்தில் இருந்துள்ளார். பெண் தனியாக நிற்பதை கவனித்த 35 வயதுடைய இளைஞர், பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

பாலியல் வன்கொடுமை முயற்சி:

அப்போது, பெண்மணி திருப்பூருக்கு தான் வேலை தேடி வந்துள்ளதாக தெரிவிக்கவே, இளைஞர் தனக்கு தெரிந்த பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். பெண்ணை நல்லூர், புதுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். 

உதவிய உள்ளூர் மக்கள்:

இதனால் பதறிப்போன பெண்மணி சத்தம் போட்டு, வாலிபரை தள்ளிவிட்டு அலறியபடி காங்கயம் சாலையில் இருக்கும் பேக்கரிக்குள் சென்று தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு இருந்தவர்களிடம் உதவி கேட்ட நிலையில், நல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் வந்த அதிகாரிகள் இளம்பெண்ணை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
 

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தலைநகரில் அதிர்ச்சி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #sexual abuse #பலாத்காரம் முயற்சி #காட்டுப்பகுதி #திருப்பூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story