×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலனை நம்பி வீட்டை விட்டு புறப்பட்ட 12 வயது சிறுமி.. ஒரு வாரத்தில் நடந்த அவலம்.. திருப்பூரில் ஷாக்.!

12 Year Old Girl Rape Name of Love Marriage: 12 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார்.

Advertisement

காதல் பெயரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இளைஞர் போக்ஸோவில் கைதாகி இருக்கிறார். 

12 வயது சிறுமி:

Coimbatore News: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகேயுள்ள கிராமத்தில், 12 வயதுடைய சிறுமி ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். தாய்-தந்தையுடன் இங்கு இருக்கிறார். இவரின் பெற்றோர் தினமும் வேலைக்குச் சென்றால் பின் மாலையில் வருவது வழக்கம்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி வன்கொடுமை.. காட்டுப்பகுதியில் நடந்த அவலம்.. காதல் பெயரில் கொடூரம்.!

மாணவி மாயம்:

இதனிடையே, ஒரு வாரத்துக்கு முன்னதாக பேன்சி ஸ்டார் சென்று வருவதாக கூறிய சிறுமி, மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் மாணவி மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்தனர்.

பாலியல் வன்கொடுமை:

இந்நிலையில், மாயமான சிறுமியுடன் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மாணவியிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருமண ஆசை காட்டி இளைஞர் சிறுமியிடம் அத்துமீறியது உறுதியானது.

இதனையடுத்து, பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட புல் பாபு குமார் (வயது 20) என்ற இளைஞரை போக்ஸோவில் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #Love Rape #12 வயது சிறுமி #பாலியல் பலாத்காரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story