ஆம்பூர்: 7 வயது சிறுமி பலாத்காரம்.. 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.!
ஆம்பூர்: 7 வயது சிறுமி பலாத்காரம்.. 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.!
பச்சிளம் சிறுமியை கயவன் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நாடோடிகள் குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் 3ம் வகுப்பு பயிலும் 7 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; 28 வயது இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கொள்ளை.!
இதே பகுதியில் 11ம் வகுப்பு பயின்று 16 வயது மாணவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே, மாணவர் சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மருத்துவ பரிசோதனையில் பலாத்காரம் உறுதி
இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமி மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர். இதன்பேரில் நடந்த விசாரணையில் 16 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 16 வயது மாணவரை போக்ஸோவில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் மனைவி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; சித்தியின் கையால் சாப்பிட்டு, எமனாக பாய்ந்த இளசுகள்.. பகீர் பின்னணி.!