×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; 28 வயது இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கொள்ளை.!

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; 28 வயது இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கொள்ளை.!

Advertisement

கள்ளக்காதலை கைவிட்ட கரைந்தால், கள்ளக்காதலியை நிர்வாணப்படுத்தி கத்தியால் வெட்டிய நபரின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் வசித்து வருபவர் வீரபத்திரன் (31). இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த பிப்.03 அன்று நள்ளிரவு நேரத்தில், இவரின் வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், காரில் வந்து வீரபத்திரன், அவரின் மனைவி சத்யா (28) ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

மேலும், சத்யாவை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த நபர்கள், 15 சவரன் நகைகள், ரூ.1 இலட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்த விஷயம் குறித்து சூரிசிலாப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காரி உரிமையாளரான, வேலூர் மாவட்ட காட்பாடியை சேர்ந்த சுரேஷ் (வயது 34) கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: திமுக பிரமுகர் மனைவி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; சித்தியின் கையால் சாப்பிட்டு, எமனாக பாய்ந்த இளசுகள்.. பகீர் பின்னணி.!

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்

விசாரணையில், வீரபத்திரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் காட்பாடியில் ஒன்றாக தொழில் ஒன்று செய்து வந்துள்ளனர். இதனால் வேலைக்கு எதுவாக வீரபத்திரன் காட்பாடியில் வாடகை வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். அப்போது, அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்ற சுரேஷ் - சத்யா ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இந்த விஷயம் வீரபத்திரனுக்கு தெரியவந்து அவர் மனைவியை கண்டித்தும் பலனில்லை. இதனால் வீரபத்திரன் மனைவியை பிரிந்தார். பின் சில மாதத்தில் சத்யாவின் தந்தை இறந்துவிட, அப்போது காட்பாடி சென்றபோது, தம்பதியை உறவினர்கள் சமாதானம் செய்து சேர்த்து வைத்தனர். இதனால் சுரேஷுடன் கொண்ட தொடர்பை சத்யா கைவிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது நண்பர்களான ஜாபர் (36), கர்ணன் (34) உட்பட 5 பேரை அழைத்துக்கொண்டு கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றி, சத்யாவை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து இருக்கின்றனர். இந்த விஷயம் அம்பலமானதைத்தொடர்ந்து கர்ணன், சுரேஷ் உட்பட 5 பேரை கைது செய்த அதிகாரிகள், ஜாபரை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: பாப்பா.. தாத்தா கூட வா லட்டு தாரேன்.. பேத்தி வயதுள்ள சிறுமியிடம் செய்யும் வேலையா இது? போக்ஸோவில் கைது.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tirupattur #Affair #tamilnadu #திருப்பத்தூர் #கள்ளக்காதல் #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story