கள்ளக்காதலை கைவிடமறுத்த மகள்.. வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த தாய்-தந்தை.. அதிர்ச்சி சம்பவம்.!
Nanguneri News: மகளின் வாயில் பெற்றோர் விஷம் ஊற்றி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்காதலை கைவிட மறுத்த மகளை கொலை செய்த பெற்றோர் தற்கொலை நாடகமாடியது அம்பலமானது.
வீட்டு வேலை:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, செண்பகராமநல்லூர் பகுதியில் சிவன் (வயது 60). இவரின் மனைவி வைரம்மாள் (வயது 57). இந்த தம்பதிக்கு 5 மகள்கள் இருக்கும் நிலையில், ஐந்தாவது மகள் அமுதா (வயது 21). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, தாயுடன் வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!
நெருக்கம்:
இதனிடையே, இவரின் வீட்டுக்கு உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, அமுதாவுக்கும் - பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். அதனை கண்டுகொள்ளாத அமுதா, உறவை தொடர்ந்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிவன், வைரம்மாளுக்கு தெரியவந்துள்ளது.
தற்கொலை?
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அமுதாவை கண்டித்து கள்ளக்காதலை கைவிட கூறியுள்ளனர். இதனால் பெற்றோர் - மகள் இடையே அவ்வப்போது தகராறு உண்டாகி இருக்கிறது. பெண் தொடர்ந்து கள்ளக்காதல் உறவில் தொடர்ந்து வந்த நிலையில், பெற்றோர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் அமுதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
விஷம் ஊற்றி கொலை:
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. பின் பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்தபோது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததை உறுதி செய்துள்ளனர். அமுதாவின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல சித்தரித்து இருக்கின்றனர் என்பது அம்பலமானது.
இதையும் படிங்க: பெண்ணுடன் கள்ளக்காதல்.. வாயில் விஷம் ஊற்றி துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட இளைஞர்.. தாத்தா-பேரன் பகீர் செயல்.!