×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

16 வயது சிறுமியை சவுக்குத்தோப்பில் பலாத்காரம் செய்த காதலன்.. நண்பனையும் அத்துமீற அனுமதித்த கொடுமை.!

16 வயது சிறுமியை சவுக்குத்தோப்பில் பலாத்காரம் செய்த காதலன்.. நண்பனையும் அத்துமீற அனுமதித்த கொடுமை.!

Advertisement

 

படிக்கும் வயதில், ஆர்வக்கோளாறு வயதில் காதலில் விழும் சிறுமிகள், கயவனின் எண்ணம் புரியாமல் தனிமையான இடத்திற்கு சென்றால் எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி, அங்குள்ள கீழத்தோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை சந்திக்க சென்று இருக்கிறார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த கண்ணன் என்பவரின் மகன் அரவிந்த், சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். 

இதையும் படிங்க: எமன் விடுப்பில் இருந்ததால் தப்பிய இளைஞர்; 2 பேருந்துக்கு நடுவே நசுங்கியும் உயிர்தப்பிய பகீர் காட்சிகள்.! 

சிறுமி பலாத்காரம்

பின் அவ்வப்போது இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனிடையே, சம்பவத்தன்று சிறுமியை தனியாக சந்திக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறிய அரவிந்த், ராஜாமடம் சவுக்குத்தோப்பு பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய அரவிந்த், பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது. 

அத்துமீறிய நண்பன்

அரவிந்த் மட்டுமல்லாது, அவரின் நண்பரான சக்திவேல் என்பவரின் மகன் சரணும் சிறுமியிடம் அத்துமீற அரவிந்த் இசைந்து இருக்கிறார். இதனால் சிறுமி கதறியபடி அழுத நிலையில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உள்ளூர் மக்கள், அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அரவிந்த், சரண் ஆகியோர் தப்பிச் சென்றனர். 

போக்ஸோவில் கைது

இந்த விஷயம் தொடர்பாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி சரண், அரவிந்த் ஆகியோரின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: காப்பாத்துங்க, நெஞ்சு வலிக்கிது.. தரையில் உருண்டு காங்கிரஸ் மேயர் கதறல்.. திமுக கவுன்சிலர்கள் கொந்தளிப்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #Pattukkottai #Minor Girl #Rape #sexual abuse #பாலியல் பலாத்காரம் #தஞ்சாவூர் #அதிராம்பட்டினம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story