×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JUSTIN: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. 'தீப்பெட்டி கேட்பதாக நடித்து துணிகரம்' காம கொடூரனுக்கு தர்ம அடி..!

Kanchipuram News: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

Advertisement

30 வயதுடைய மாற்றுத்திறன் பெண்ணை வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

மாற்றுத்திறன் பெண்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் 30 வயதுடைய பெண்மணி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். நேற்று இரவு வழக்கம்போல தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவர், பெண்ணிடம் தீப்பெட்டி கேட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

பாலியல் தொல்லை:

இந்த சமயத்தில், பெண்ணிடம் பாலகிருஷ்ணன் பாலியல் சீண்டலில் ஈடுபடவே, பதறிப்போன பெண்மணி பயத்தில் அலறி இருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பாலகிருஷ்ணனை தர்ம அடியால் கதறவைத்து பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளி கைது:

தகவல் அறிந்து வந்த வாலாஜாபாத் காவல்துறையினர், இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும், பெண் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில், பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

போதை அடிமை:

மதுபோதை, கஞ்சாவுக்கு அடிமையாக இருந்த பாலகிருஷ்ணன் தற்போது வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவரின் மீது அடிதடி தொடர்பான வழக்குகளும் உள்ளது. இதனிடையே, தற்போது பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தப்பு பண்ணிட்டோம் தூக்குல தொங்கிடலாம்".. கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. இறுதியில் பறிபோன உயிர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #kanchipuram #Rape #மாற்றுத்திறனாளி பெண்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story