செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை? ஜன்னல் வழியே ஏறிக்குதித்து வடமாநில தொழிலாளி கொடூரம்.!
மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் கொலை செய்யப்பட்டார்.
ஒரு மாதமாக செவிலியரின் நடமாட்டத்தை நோட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட குற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவிலியர்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பகதீஷரீஃப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள கொத்தகுடேம் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக வேலைக்காக ஹைதராபாத் வந்தவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பணியிடத்திற்கு அருகிலேயே தங்குமிடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மயானத்தில் ரௌடிக்கு ஸ்கெட்ச்.. முகம் சிதைத்து கொடூர கொலை ஏன்? பரபரக்க வைக்கும் தகவல்.!
பீகார் தொழிலாளி:
இவர்களின் மருத்துவமனையில் அமைந்துள்ள செவிலியர் ஓய்வறைக்கு அருகில், பக்கத்து வளாகத்தில் பைக் மெக்கானிக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 2023 ம் ஆண்டில் இருந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் பணியிடத்தில் இருந்து செவிலியரின் ஓய்வறையை பார்க்கலாம் என கூறப்படுகிறது.
வன்கொடுமை முயற்சி:
கடந்த ஒரு மாதமாக ஓய்வறையில் இருந்த செவிலியரை நோட்டமிட்டு வந்த பீகார் தொழிலாளி, சம்பவத்தன்று செவிலியரின் ஓய்வறைக்குச் சென்று ஜன்னல் வழியே உள்ளே நுழைந்துள்ளார். அங்கு உறங்கிக்கொண்டு இருந்த செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கவே, அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் பெண் மயங்கிவிட, பின் அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார்.
விசாரணை:
போதையில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டவர், அது தோல்வியடைந்ததும் தனது அறைக்கு சுவர் ஏறிக்குதித்துச் சென்று உறங்கி இருக்கிறார். செவிலியர் கழுத்து நெரிக்கப்பட்டு துள்ளத்துடிக்க உயிரிழந்த நிலையில், அவர் மயங்கி இருப்பதை தாமதமாக கண்ட சக ஊழியர்கள், அவரை சோதித்தபோது மரணம் உறுதியானது. பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
கைது:
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிரா, செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில் பீகார் தொழிலாளி குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவரை அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த ஒரு மாதமாகவே செவிலியரின் நடமாட்டத்தை கண்காணித்து குற்றத்தை அரங்கேற்றியதாக கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. கண்ணீரில் குடும்பத்தினர்.!