×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாப்பிட வந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சித்த 60 வயது தாத்தா.. கோவையில் ஷாக்.!

Coimbatore News: இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யோகா ஆசிரியர்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், விராலியூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் அருணன் (வயது 60). இவரின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். அருணன் தனது மனைவியுடன் இங்கு வசித்து வருகிறார். இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வரும் அருணன், யோகா ஆசிரியராகவும் இருக்கிறார்.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

இளம்பெண்:

தம்பதிகள் வசித்து வந்த பக்கத்து வீட்டில், தேனி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் தனது 5 தோழிகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவத்தன்று 5 இளம்பெண்கள் வேலைக்கு சென்றுவிட்டார்கள். 22 வயது இளம்பெண் தனியாக இருந்துள்ளார்.

பலாத்கார முயற்சி:

இவர்கள் அருணனின் வீட்டில் பணம் செலுத்தி உணவு சாப்பிட்டு வந்த நிலையில், 22 வயது இளம்பெண் அருணனின் வீட்டில் காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அருணனின் மனைவி பிரியா உடல்நலம் சரியில்லாத காரணத்தால், தனி அறையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்துள்ளார். இளம்பெண் சாப்பிட தட்டை சுத்தம் செய்ய முயன்ற நிலையில், திடீரென அங்கு வந்த அருணன் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

தர்ம அடி:

இதனால் அதிர்ந்துபோன இளம்பெண் அலறி சத்தமிட்டு வெளியே வந்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அருணனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த ஆலந்துறை காவல்துறையினர், நேரில் வந்து அருணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: 74 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. திருட வந்த வீட்டில் போதையில் பெருங்கொடூர செயலால் பரபரப்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harassment #Coimbatore #yoga teacher #22 வயது பெண் #தாத்தா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story