இன்ஸ்டாகிராமில் மூழ்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. காதலிப்பதாக நடித்து 3 பேரால் நடந்த கொடுமை.. கண்ணீர் சோகம்.. சென்னையில் ஷாக்.!
Chennai Marina Beach Girl Rape: சென்னை மெரினா கடற்கரையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வன்கொடுமை செய்த கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
பெண் மாயம்:
சென்னையில் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் 19 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், பெற்றோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். அவரை பெற்றோர் உறவினர் வீடு, பிற இடங்கள் என தேடி பார்த்துள்ளனர். பின் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!
வன்கொடுமை உறுதி:
இதனிடையே, கடந்த 19ம் தேதி மாம்பழம் ரயில் நிலையத்தில் ராணி சுற்றித்திரிந்த நிலையில், அதனைப்பார்த்த பெற்றோர் மீட்டு இருக்கின்றனர். மேலும், ராணியின் உடலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் காயம் இருந்தது. இதனால் அவரை மீட்ட பெற்றோர் திருவெல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவர்கள் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். மேலும், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்:
இதனையடுத்து, அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், பெண் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்ததில் நடந்தது அம்பலமானது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பல ஆண்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார். இவர்கள் ஆபாசமாகவும் பேசிக்கொண்டதாக தெரியவருகிறது. கடந்த 13ம் தேதி இன்ஸ்டாகிராம் காதலன் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருந்து வெளியேறிய பெண், எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே சென்று காத்திருந்துள்ளார்.
கடற்கரையில் கொடுமை:
இன்ஸ்டாகிராம் காதலனான சிந்தாதிரிப்பேட்டை இம்ரான் (வயது 30) அங்கு வந்து இருசக்கர வாகனத்தில் பெண்ணை அழைத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். ராணிக்கு பிரியாணி, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் மெரினாவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், மாநகராட்சி நீச்சல் குளம் அருகில் இருக்கும் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின் மறுநாள் அதிகாலையில் செலவுக்கு ரூ.500 பணம் கொடுத்து கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு மாம்பலம் செல்லுமாறு கூறி புறப்பட்டு இருக்கிறார்.
துணி கடையில் வேலை:
ரயிலில் ஏறி மாம்பழம் வந்தடைந்த பெண்மணி, இரவில் வீட்டுக்கு செல்லாததால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து இருக்கிறார். பின் ஆட்டோ ஓட்டுனரிடம் ஏதேனும் வேலை கிடைக்குமா என கேட்டு, தி. நகரில் செயல்படும் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு பணியில் இணைந்ததும் வீட்டுக்கு செல்லாமல், சக பெண் ஊழியர்களுடன் அறையில் தங்கி 2 நாட்களாக பணிக்கு சென்று வந்துள்ளார். பின் இன்ஸ்டாகிராம் நண்பர்கள் அழைப்பின் பேரில் கடந்த 16ம் தேதி சென்ட்ரலில் இருந்து கோவை, கோவையில் இருந்து திருப்பூர், அங்கிருந்து காட்பாடி, வேலூர் வழியே இறுதியாக அரக்கோணம் வந்துள்ளார்.
அடுத்தடுத்து நடந்த சோகம்:
பின் அரக்கோணத்தில் 2 இன்ஸ்டாகிராம் நண்பர்களை சந்தித்த பெண்மணி, அவர்கள் அழைத்ததன் பேரில் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராணியை இன்ஸ்டாகிராம் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் ராணியின் உடல்நலம் மோசமான நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் பயந்து ராணியின் செல்போனை எடுத்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்து தப்பிச் சென்றுள்ளனர். நண்பர்களை நம்பி வந்தால் ஏமாற்றிவிட்டனரே என உணர்ந்த பெண்மணி, என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் சென்ட்ரல் வந்து மாம்பலம் வந்துள்ளார். மாம்பலம் ரயில் நிலையத்தில் மே 19ம் தேதி உடல்நலம் தவித்து இருக்கிறார். தனக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல், இன்ஸ்டாகிராமில் முழுநேர கவனத்தையும் செலுத்தி வந்த பெண் எப்போதும் அதனை பயன்படுத்தியபடியே இருந்துள்ளார்.
அதிகாரிகள் அதிரடி:
இதனையடுத்து, இந்த வழக்கை கையில் எடுத்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் சிம்ரனை கைது செய்தனர். மேலும், அரக்கோணம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாதவிடாய் என கெஞ்சியும் பலனில்லை.. காவல்நிலைய பெண் ஊழியர் வன்கொடுமை.. ஓசூரில் நெஞ்சை உலுக்கும் கொடுமை.!