×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்குப் பின் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!

New Ration Card in Tamilnadu: பெயர் நீக்கல் சான்றிதழ் முதல் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ரேஷன் கார்டு பெறலாம்.

Advertisement

திருமணத்திற்குப் பின் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? பெயர் நீக்கல் சான்றிதழ், TNPDS ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை, தேவையான ஆவணங்கள் மற்றும் செயல்முறை காலம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Ration Card Update: திருமணத்திற்குப் பிறகு மணப்பெண் தனது தந்தை வீட்டின் ரேஷன் கார்டிலிருந்து பெயரை நீக்கி, கணவர் முகவரியில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது கட்டாய நடைமுறையாகும். தம்பதிகள் இருவரும் விரும்பும் பட்சத்தில் தங்களின் குடும்பத்தை மட்டும் தனியாக பதிவு செய்தும் ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம். இதில் கணவரின் குடும்பத்தில் பெண்ணை இணைத்து ரேஷன் கார்டு பெறுவது எளிதான நடைமுறை ஆகும். இதற்காக முதலில் பெற்றோர் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கல் சான்றிதழ் (Deletion Certificate) பெற வேண்டும். அதன் பின்னர் Tamil Nadu Public Distribution System (TNPDS) இணையதளம் https://www.tnpds.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

நடைமுறை என்ன?

விண்ணப்பிக்கும் நடைமுறையில் முதற்கட்டமாக மணப்பெண் தனது பெற்றோர் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கி அதற்கான சான்றிதழை பெற வேண்டும். பின்னர் TNPDS இணையதளத்தில் “Smart Card Application” என்பதைத் தேர்வு செய்து, மணமகன் மற்றும் மணமகள் விவரங்கள், புதிய முகவரி, ஆதார் எண்கள் உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்ப வேண்டும். அதன் பின்னர் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ. 1500 வழங்க... தமிழகம் முழுவதும் நாளை(நவ..20) அனைத்து பள்ளிகளுக்கும் அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு.!

தேவையான ஆவணங்கள்:

பதிவேற்ற வேண்டிய முக்கிய ஆவணங்களில் கணவன் மற்றும் மனைவி ஆதார் கார்டு நகல், திருமணச் சான்றிதழ் அல்லது திருமண அழைப்பிதழ், பெற்றோர் ரேஷன் கார்டிலிருந்து பெறப்பட்ட பெயர் நீக்கல் சான்றிதழ் மற்றும் புதிய முகவரி ஆதாரம் (மின் கட்டண ரசீது அல்லது வாடகை ஒப்பந்தம்) ஆகியவை அடங்கும். அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்ததும் ஒரு குறிப்பு எண் (Reference Number) வழங்கப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்க முடியும்.

புதிய கார்டு விண்ணப்பம்:

புதிய ரேஷன் கார்டு பதிவு செய்ய விரும்பும் தம்பதிகள், தங்களின் இருதரப்பு ரேஷன் கார்டிலும் முதலில் பெயரை நீக்கிக்கொள்ள வேண்டும். ஆதார் கார்டில் முகவரி திருத்தம் இருந்தால், முன்கூட்டியே செய்துகொள்வது நல்லது. பின் புதிய முகவரியில் வீடு ரசீது / ஈபி பில் ரசீது உட்பட தேவையான ஆவணங்கள் கொண்டு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுவாக புதிய ரேஷன் கார்டு 1 முதல் 2 மாதங்களுக்குள் வழங்கப்படும். சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டால் 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தவறவிடுவதால் ஏற்படும் பாதிப்பு:

தம்பதிகள் திருமணச் சான்றிதழ் பதிவு செய்தபின்னர், பெண்ணின் சட்ட உரிமைகள், அரசு சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் தந்தைக்கு பதிலக கணவரின் அடிப்படையில் வழங்கப்படும். இதனால் கல்லூரி உட்பட மேற்படிப்பு செல்ல விரும்பும் பெண்கள் அரசின் திட்டம் மற்றும் வருமானம் உட்பட முக்கிய சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க, கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு ஆவணங்கள் தேவைப்படும்போது இது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், புதுமணத்தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு இந்த பணிகளையும் நிறைவு செய்வது நல்லது.
 

இதையும் படிங்க: TN Govt Schemes: திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்.. தமிழக அரசின் திட்டம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #ration card #தமிழ்நாடு #ரேஷன் கடை #புதிய ரேஷன் கார்டு #ரேஷன் கார்டு திருத்தம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story