×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாட்சப்பில் போட்டோ அனுப்பி ஹைடெக் விபசாரம்.. சென்னையில் வடமாநில புரோக்கர் கும்பல் கைது.!

பாலியல் தொழில் செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

ஹைடெக் முறையில் பாலியல் தொழில் நடத்தி வந்த இரண்டு தரகர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேரில் கண்காணிப்பு:

சென்னையில் உள்ள பெரியமேடு, பெரியண்ண மேஸ்திரி தெருவில் இருக்கும் வீட்டில், வடமாநில இளைஞர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் அதிகம் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, பொறுப்பு காவல் ஆய்வாளர் ஜெயவனிதா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் கொடுமை.. பெண்கள் வெளியே வரவேகூடாதா? 2 முதியவர்கள் சேர்ந்து அதிர்ச்சி செயல்.!

பாலியல் தொழில் உறுதி:

அப்போது, குறிப்பிட்ட வீட்டுக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் பல இளைஞர்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த வீட்டுக்குள் அதிரடியாக சென்ற காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விக்கி ஷைனி (வயது 33), தெலுங்கானா மாநிலம் ஹைத்ராபாத்தைச் சேர்ந்த ராகேஷ் ஷென் (வயது 31) ஆகியோர் தரகர்கள் என்பது அம்பலமானது.

ஹைடெக் முறையில்..

இவர்கள் இருவரையும் கைது செய்து நடந்த விசாரணையில், பெரியமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, வடமாநில தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸப்பில் விபச்சாரம் நடத்தி வந்தது அம்பலமானது. வாட்ஸப்பில் இளம்பெண்களின் புகைப்படத்தை பகிர்ந்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
 

இதையும் படிங்க: மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Crime news #prostitution #ஹைடெக் விபச்சாரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story