×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

23 நாட்கள் ஆகிட்டு... காட்டுக்குள் அரவிந்திடம் நடந்த நள்ளிரவு விசாரணை! அடுத்தடுத்து சிக்கிய அதிர்ச்சி உண்மைகள்... செஞ்சி சிறுமி வழக்கில் புதிய திருப்பம்!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சந்தேக நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில், 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 23 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கடந்த அக்டோபர் 11-ம் தேதி நள்ளிரவில் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனார். உள்ளூர் போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போலி சிம் கார்டுகள் தொடர்பாக ராஜதுரையிடம் விசாரணை

வழக்கில் முக்கிய திருப்பமாக, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் சிபிசிஐடி போலீசார் சிறையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமி மாயமான நள்ளிரவில் ஆலம்பூண்டி பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு போலி சிம் கார்டுகளின் அழைப்புகள் போலீசாரின் கவனத்துக்கு வந்துள்ளன.

இதையும் படிங்க: தயவு செய்து தேவையில்லாத பேச்சு பேசாதீங்க..! எங்களுக்கு பணம் வேண்டாம்.. எங்க மகளை மீட்டு கொடுத்தாலே போதும்! கண்ணீர்விட்டு கதறிய செஞ்சி சிறுமியின் தாய்..!!!

மேலும், சம்பவத்தன்று இரவு சிறுமியின் வீட்டுக்கு அருகே ராஜதுரையின் கூட்டாளிகள் மது அருந்தியபடி கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் ராஜதுரையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

காட்டுப் பகுதிகளில் அரவிந்தை அழைத்துச் சென்று ஆய்வு

ராஜதுரையின் நெருங்கிய கூட்டாளியான அரவிந்த் என்பவரின் பெயரும் விசாரணையில் வெளிவந்துள்ளது. ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அவர், ஆலம்பூண்டியைச் சுற்றியுள்ள காட்டுப் பாதைகள் மற்றும் புதர் பகுதிகளை நன்கு அறிந்தவர் எனக் கூறப்படுகிறது. சிறுமி மாயமான சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, செஞ்சி வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அரவிந்தை ஆலம்பூண்டியைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளுக்கு போலீசார் அழைத்துச் சென்று ஆய்வு செய்தனர். சிறுமியை அழைத்துச் சென்றவர்கள் அந்த வழிகளைப் பயன்படுத்தினார்களா, அப்பகுதியில் ஏதேனும் தடயங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. ராஜதுரையுடன் அரவிந்த் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

லாரி ஓட்டுநர்களிடமும் விசாரணை தீவிரம்

மற்றொரு புறம், சிறுமியை நெடுஞ்சாலை வழியாக லாரியில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இதற்காக 13 தேசிய அனுமதி பெற்ற லாரி ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். உள்ளூர் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளிலும் சந்தேக நபர்களின் புகைப்படங்களைக் காட்டி தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

அரவிந்திடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள், செல்போன் கோபுரப் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். 23 நாட்களாக நீடிக்கும் சிறுமியின் மாயம் குறித்த மர்மம் விலகுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: 22 நாட்களுக்கு மேல் ஆகிட்டு..! வெவ்வேறு திசைகளில் சென்று மீண்டும் வீட்டுக்கே திரும்பும் விசாரணை...! செஞ்சி சிறுமி வழக்கில் என்னதான் நடந்தது...? நாளுக்கு நாள் அதிர்ச்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹேமலதா மாயம் #செஞ்சி சிறுமி #CBCID Investigation #ஆலம்பூண்டி #குழந்தை கடத்தல் விசாரணை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story