வானிலை: 20 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உட்பட 20 மாவட்டங்களில் இரவில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Rains: தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய டிட்வா புயல் இலங்கையை புரட்டியெடுத்துவிட்டு தமிழகம் நோக்கி பயணித்த நிலையில், வங்கக்கடலிலேயே வலுவிழந்து விலகிச் சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை:
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Tamilnadu Weather: அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இதையும் படிங்க: #Breaking: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!