Tamilnadu Weather: அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
செங்கல்பட்டு, மயிலாடுதுறை உட்பட 11 மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் சென்னையை விட்டு விலகிச் சென்றாலும், அதன் தாக்கம் காரணமாக திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இன்று (டிச.02) வடதமிழக கடலோரப்பகுதிகளில் அநேக இடங்களிலும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றைய வானிலை:
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்றைய வானிலை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இங்கே.!
இரவு 7 மணிவரை மழை:
இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரும் 3 மணிநேரத்துக்கு, அதாவது இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: காலையிலேயே வந்த அலர்ட்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுக்கும் மழை.. 8 மாவட்டங்கள் உஷார்.!