நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.!
வார முதல்நாளே தங்கம் விலை ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை ரூ.800 அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Gold Price Today: உலகளாவிய பொருளாதார தன்மை, தங்கம் மீதான முதலீடு, டாலர் மதிப்பு, போர் சூழல் பதற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த சில ஆண்டுகளாகவே உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய விஸ்வரூபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்:
ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் மக்கள் பரிதவித்து வரும் அதே வேளையில் உலகின் வர்த்தக பொருளாதார மையமாக இருக்கும் துபாயிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ரூ.1 லட்சத்தை நோக்கி தங்கம்.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு.!
உச்சத்தை நோக்கி தங்கம்:
இதனால் பிரதான சேவைகள் முடங்கி அச்ச சூழல் நிலவுகிறது. இதனிடையே தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்து வரும் நிலையில், போர் சூழல் காரணமாக இந்த விலை மேலும் கிடுகிடுவென உயரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வார விலை நிலவரம்:
கடந்த சனிக்கிழமையை பொறுத்தமட்டில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனையானது. கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் & வெள்ளி விலை:
அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், பார் வெள்ளி ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: போக்குக்காட்டும் தங்கம்.. உச்சத்தில் வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்.!