போக்குக்காட்டும் தங்கம்.. உச்சத்தில் வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்.!
இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை ரூ.320 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
தங்கம் மீதான முதலீடு, உலகளாவிய பிரச்சனை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித எதிர்பார்ப்பு போன்ற பல காரணங்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீதான விலையை உயர்த்தி வருகிறது. கடந்த மாதம் தங்கம் விலை ரூ.97,000 வரை சென்று பின் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது.
உச்சத்தை நோக்கி & வெள்ளி தங்கம்:
வெள்ளியின் விலையும் ரூ.1,97,000 வரை கிலோவுக்கு உயர்ந்திருந்த நிலையில் குறைந்து தற்போது அதிரடியாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம் மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: JustIN: ரூ.12 ஆயிரத்தை கடந்தது ஒரு கிராம் தங்கம்.. வெள்ளி விலையும் உயர்வு.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி.!
விரைவில் மாற்றம்:
தொழிற்சாலைகள் அதிக வெள்ளி பொருட்களை வாங்கி குவிப்பதாலும், சீனா தங்கத்தின் மீதான இறக்குமதியை அதிகரித்துள்ளதாலும் சர்வதேச அளவில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று (Gold Rate Today In Chennai):
அதன்படி சென்னையில் இன்று சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.12,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தமட்டில் ரூ.1,000 உயர்ந்து ரூ.1,99,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ரூ.1 லட்சத்தை நோக்கி தங்கம்.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு.!