×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நகைப்பிரியர்களுக்கு ஷாக்.. அதிரடி காட்டும் தங்கம் & வெள்ளி விலை.. தாறுமாறு உயர்வு.!

இன்றைய தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. 

Advertisement

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய & நாளைய தங்கம் விலை குறித்து காணலாம்.

சமீப காலமாக வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் நகர்ந்து வருகின்றன. ஒரு நாள் விலை குறைவதும், மறுநாள் மீண்டும் உயர்வதும் நுகர்வோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அட்சய திருதியை என்பதால் தங்கம் வாங்க இது சரியான நேரமா? அல்லது காத்திருக்கலாமா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. 

உச்சத்தை நோக்கி தங்கம்:

உலகளாவிய பொருளாதாரம் மற்றும் தங்கம் மீதான முதலீடு காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாகவே உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த 14ம் தேதி முதல் 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் நேற்று சரிவை சந்தித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது ரூ.1,14,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ரூ.1 லட்சத்தை நோக்கி தங்கம்.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு.!

இன்றைய தங்கம் விலை:

இந்நிலையில் சென்னையை ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி 1 கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.14,360க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தமட்டில் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000 விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று உச்சத்தை தொட்டுள்ளதால் நாளை ஞாயிறு அன்றும் விலை மாற்றமின்றி இருக்கும். 

இதையும் படிங்க: போக்குக்காட்டும் தங்கம்.. உச்சத்தில் வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gold rate today #தங்கம் #அட்சய திருதியை #Akshaya Tritiya #silver rate
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story