×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

35 நாட்கள் நீடிக்கும் மர்மம்..! செஞ்சி சிறுமி பெற்றோரின் பாஸ்புக் பறிமுதல்...! பணம் தொடர்பில் CBCID கையில் சிக்கிய தடயம்..! அடுத்தடுத்து திடீர் திருப்பம்..!!!

செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் பெற்றோரின் செல்போன்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துள்ளனர். பணப் பரிவர்த்தனைகள், அழைப்புப் பதிவுகள் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோரான வடிவேலு, பவானி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துள்ளனர். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

டிஐஜி நேரடி விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை

செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு தாய், பாட்டி அருகில் உறங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.

இதையும் படிங்க: 33 நாட்களாக நீடிக்கும் மர்மம்! 4 குழுக்களாக பிரிந்து காட்டில் தேடியபோது கிடைத்த தடையம் ..! அதிர்ச்சியில் உறைந்த சிபிசிஐடி... இறுதியில் நடந்த ட்விஸ்ட்...! செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்!!!

உள்ளூர் போலீசார் 10 நாட்களாகத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா மற்றும் ஆய்வாளர்கள் குமார், சாஸ்தா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாக ஆலம்பூண்டி கிராமத்திற்குச் சென்று, சிறுமியின் தாய், தந்தை மற்றும் பாட்டியிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையைத் தொடர்ந்து, பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பணப் பரிவர்த்தனைகள், அழைப்புப் பதிவுகள் ஆய்வு

சிறுமி மாயமானதற்கு முன்பும், அதற்குப் பிறகும் பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாகப் பெரிய தொகை வரவு வைக்கப்பட்டதா அல்லது யாருக்காவது பணம் அனுப்பப்பட்டுள்ளதா என்பதும் விசாரிக்கப்படுகிறது.

மேலும், வங்கிக் கணக்குப் புத்தகங்களுடன் பெற்றோரின் செல்போன்களில் உள்ள யுபிஐ செயலிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக நடைபெற்ற பணப் பரிமாற்ற விவரங்களும் சைபர் கிரைம் நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவம் நடந்த நாட்களில் யாருக்கெல்லாம் அழைப்புகள் சென்றன, முக்கியமான அழைப்புப் பதிவுகள் அல்லது வாட்ஸ்அப் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கண்டறிய முயற்சி நடைபெறுகிறது.

ஏற்கனவே எழுந்த பணம் தொடர்பான விவகாரங்கள்

இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சில பணம் தொடர்பான தகவல்கள் விசாரணையில் கவனம் பெற்றிருந்தன. ஆறு ஆண்டுகளாகக் கொண்டாடப்படாத பிறந்தநாள் விழாவின்போது, மூத்த மகளுக்காகப் பேசி வைக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இருந்து ரூ.2,000 செலவு செய்து கேக் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதேபோல், நடுப்பட்டு கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிறுமியின் தாயாருக்கு ரூ.2,000 வழங்கி உதவிய விவகாரமும் விசாரணையில் இடம்பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, குடும்பத்தின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் தரவுகளை முழுமையாக ஆய்வு செய்வதன் மூலம் பணப் பிரச்சினை, கடன் தொடர்பான விவகாரம் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதைத் தெளிவுபடுத்த சிபிசிஐடி முயற்சித்து வருகிறது.

காடுகள், மலைப்பகுதிகள், கிணறுகள், சுடுகாடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடுதல் நடத்தியும், பல்வேறு தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டும் இதுவரை சிறுமி குறித்து உறுதியான தடயம் கிடைக்கவில்லை. இந்நிலையில், பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: 31 நாட்கள் ஆகிட்டு...! செஞ்சி சிறுமி வழக்கில் புதிதாக களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி...! விடுப்பட்ட தடயத்தை பிடிக்க நேரடி ஆய்வு...! சிக்கப்போகும் அந்த நபர்..? விசாரணையின் அதிரடி வேகம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#செஞ்சி சிறுமி ஹேமலதா #சிபிசிஐடி விசாரணை #Hema Latha Missing Case #Bank Transaction Probe #Gingee News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story