×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வளர்ப்பு மகளுக்கு பாலியல் அத்துமீறல்..  தட்டிக்கேட்ட தாய்க்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

வளர்ப்பு மகளுக்கு பாலியல் அத்துமீறல்..  தட்டிக்கேட்ட தாய்க்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

Advertisement

திருப்பூரில் வளர்ப்பு மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற கணவரை தட்டிக்கேட்ட மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (40). மகளிர் சுயஉதவிக் குழு தலைவியாக இருந்து வந்த இவரது முதல் கணவர் உயிரிழந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் விஜயபாலன் (42) என்பவரை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், விஜயபாலனுக்கு மது மற்றும் போதைப் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில் விஜயபாலன் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த 19 வயது வளர்ப்பு மகளிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: #BREAKING : பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா காலமானார்!

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறியுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த விசாலாட்சி, கணவரின் நடவடிக்கையை தட்டிக்கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விஜயபாலன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விசாலாட்சியை தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தாயை கண்முன்னே கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்த 19 வயது பெண், வீட்டை விட்டு வெளியேறி அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், விஜயபாலன் தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 15-வேலம்பாளையம் போலீசார், விசாலாட்சியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விஜயபாலனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கியிருந்த விஜயபாலனை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: BREAKING : மகளிர் உரிமைத் தொகை திடீர் நிறுத்தம்! சற்றுமுன்... தத்தளிக்கும் தமிழக பெண்கள்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thirupur #Villupuram #cooking master #Anuparpalaya #Harrasment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story