17 வயது மாணவிக்கு தவெக நிர்வாகி செய்த கொடூரம்! டிஎன்ஏ டெஸ்ட்டில் அம்பலமான உண்மை... போலீஸ் அதிரடி கைது!!!
ஈரோடு சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 17 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமான வழக்கில், டிஎன்ஏ பரிசோதனை முடிவின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் புதிய திருப்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரைத் தொடர்ந்து தீவிர விசாரணை
மலைக் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி! அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!!
டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியான ஆதாரம்
இதற்கிடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான திருமணமான யுவராஜ் மீதும் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆரம்ப கட்டத்தில் அவரை கைது செய்ய தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் மாணவிக்கு குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, குழந்தை, மாணவி மற்றும் யுவராஜ் ஆகியோரின் ரத்த மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. ஆய்வக அறிக்கையில் குழந்தையின் தந்தை யுவராஜ் என்பதும் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைது
டிஎன்ஏ அறிக்கையைத் தொடர்ந்து போக்சோ சட்டம் கீழ் யுவராஜை மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது, அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராக இருப்பது தெரியவந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: டிஎன்ஏ சோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!