திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! அதிர்ச்சியில் திமுகவினர்....
தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டிலும், அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மாநில அமைச்சர் ஐ. பெரியசாமி வீடு மற்றும் பல்வேறு சொத்துகளில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் தீவிர ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
சென்னை மற்றும் திண்டுக்கல் வீடுகளில் சோதனை
சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த புகாரைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லம், திண்டுக்கல்லில் உள்ள வீடு, எம்எல்ஏ விடுதி மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
அமைச்சர் குடும்பத்தினரிடம் விசாரணை திட்டம்
மேலும், அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விரிவான விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: #JustIN: எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை; துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.!
இந்த சோதனைகள் அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அதன் விளைவுகள் குறித்து அனைவரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்.!!