×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுக பிரமுகர் கொடூரமாக கொலை.. ஓடஓட விரட்டி சம்பவம்.. மதுரையில் பரபரப்பு.!

Madurai News: திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார்.

Advertisement

இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

திமுக நிர்வாகி:

மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி, இலுப்பன்குளம் பகுதியில் வசித்து வருபவர் கலாநிதி (வயது 33). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குராயூர் பகுதியில் வசித்து வந்தவர், மதுரை தெற்கு மாவட்ட திமுக முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர், மாணவரணி துணை அமைப்பாளர் என பல பதவியில் பணியாற்றி இருக்கிறார். 

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!

ஊருக்குச் சென்றார்:

இதனிடையே, நேற்று இரவு நேரத்தில் கள்ளிக்குடியில் இருந்து குராயூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். இவருடன் அப்பகுதியில் வசித்து வரும் அஜித் குமார், குட்டிப்புலி ஆகியோரும் இருகனார். கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில், சொலம்பட்டி விலக்கு அய்யனார் கோயில் பகுதியில் இவர்களை பின்தொடர்ந்து வந்த கார் கலாநிதியின் இருசக்கர வாகனத்தில் மோதியது. 

கொடூர கொலை:

இந்த சம்பவத்தில் நிலைதடுமாறி விழுந்த கலாநிதியை, கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. அவர் தப்பி ஓட முயன்ற போதும் ஓடஓட விரட்டிச் சென்று முகம், கை, கால்களில் சரமாரியாக வெட்டி இருக்கிறது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அஜித் குமார் முட்புதரில் உயிர் பயத்தில் ஒளிந்துகொள்ள, ஹரிஹரன் என்ற குட்டிப்புலி தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த கள்ளிக்குடி காவல்துறையினர் கலாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓடஓட விரட்டி இளைஞரை படுகொலை செய்த 5 பேர் கும்பல்.. மதுரையில் பரபரப்பு சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #madurai #dmk #TN politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story