×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலை.. தர்மபுரியில் கண்ணீர் சோகம்.! 

Dharmapuri News: குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார். 

Advertisement

ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு அருகில் வசித்து வந்த தம்பதியின் வாழ்க்கையில் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

தம்பதிகள்: 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் வசித்து வருபவர் சரவணன். இவரின் மனைவி அம்சா (வயது 35). தம்பதிகளுக்கு ஜீவிதா என்ற 16 வயது மகள், நவீனா என்ற 6 வயதுடைய மகள், குமரன் என்ற 3 வயதுடைய மகன் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: செல்போன் பார்ப்பதில் அக்கா-தங்கைக்குள் சண்டை.. அரங்கேறிய விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர்.!

தகராறு: 

இவர்களில் சிறுமி ஜீவிதா தர்மபுரி ஒவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். சரவணன் தனது மனைவியின் நடத்தையில் எப்போதும் சந்தேகப்பட்டு வருவார் என்பதால், அவ்வப்போது குடும்பத்தகராறு செய்தும் வந்துள்ளார். 

வீட்டுக்கு வரவில்லை: 

இதனிடையே, தம்பதிகளுக்குள் கடந்த 19 ம் தேதி வழக்கம்போல சண்டை நடந்தது. அப்போது கோபித்துக்கொண்டு அம்சா குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். பின் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றில் சடலங்கள் மிதந்தது. 

சடலமாக மீட்பு: 

இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை காவல் துறையினர், நேரில் வந்து உடல்களை மீட்டனர். அப்போது, அங்கு சடலமாக மீட்கப்பட்டது அம்சா, அவரின் குழந்தைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தாய் குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது. அம்சாவின் கணவர் சரவணனை அதிகாரிகள் தேடி வருகிறார்கள். 

இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் இப்படியா? வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharmapuri #Crime news #suicide #Husband Wife #Affair Doubt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story