×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் ஜோடியிடம் காசு வாங்கி பஞ்சாயத்து? கொள்ளையனை அடித்தே கொன்ற நட்புகள்.. தர்மபுரியில் பயங்கரம்.!

Dharmapuri News: 27 வயதுடைய இளைஞர் சத்தியமூர்த்தி என்பவர் தர்மபுரியில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

கொள்ளை வழக்கில் தொடர்புடைய இளைஞர் நண்பர்களால் கொல்லப்பட்டார்.

மாயமானார்:

Crime News: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பட்டாபி நகரில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி (வயது 27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருவது இவரது அனுதின வேலை என்பதால், ஓசூர், காங்கேயம், சேலம், இரும்பாலை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதனிடையே, கடந்த மே 01ம் தேதி முதல் இவர் மாயமானார். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

காவல் நிலையத்தில் புகார்:

இதனால் பதறிப்போன சத்தியமூர்த்தியின் தாய் ராணி, மகனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. பின் இதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சத்தியமூர்த்தியை தேடி வந்தனர். விசாரணையில், 01ம் தேதி மாலை சத்தியமூர்த்தி நண்பர்கள் ஐவருடன் மதுபானம் அருந்தியது தெரியவந்தது. 

விசாரணை தீவிரம்:

பின் ஐவரின் செல்போன் எண்ணுக்கும் தொடர்புகொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சத்தியமூர்த்தியின் நண்பர்களான பூத்தையன் என்ற வெள்ளையன் (வயது 27) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

நடந்தது என்ன?

அதாவது, சம்பவத்தன்று வேடம்பட்டி வனப்பகுதியில் அனைவரும் மதுபானம் அருந்தி இருக்கின்றனர். அப்போது, சத்தியமூர்த்தி தகராறு செய்ததில் ஆத்திரமடைந்த நபர்கள் மரக்கட்டையால் தாக்கி பாறையில் அவரை முட்டவைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின் அனைவரும் பயத்தில் தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.

தொடரும் விசாரணை:

இதனையடுத்து, வனப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர். தொழில் போட்டி கொலையா? திருடிய பணத்தில் பங்கு பிரிப்பதில் தகறாரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கொலையான நபர் காதல் ஜோடிகளுக்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், பஞ்சாயத்து செய்து காசு வாங்கி காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் பணியையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதத்தில் கொலை நடந்ததா? எனவும் விசாரணை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: மூதாட்டிகள் டார்கெட்.. தேடித்தேடி பலாத்காரம், கொலை?.. தமிழகத்தை நடுநடுங்க வைத்த பயங்கரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Dharmapuri murder #காதல் #கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story