×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூதாட்டிகள் டார்கெட்.. தேடித்தேடி பலாத்காரம், கொலை?.. தமிழகத்தை நடுநடுங்க வைத்த பயங்கரம்.!

Kodaikanal News Today: கொடைக்கானலில் 74 வயதுடைய மூதாட்டியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் 27 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

Advertisement

வயதான மூதாட்டியை வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

வீட்டுக்கு வரவில்லை:

Dindigul News Today: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பெருமாள்மலை பகுதி, ஆணைகிரி சோலை குடியிருப்பு பகுதியில் முதியவர், தனது 74 வயதுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 30ம் தேதி காய்கறி வாங்க முதியவரின் மனைவி வெளியே சென்ற நிலையில், மீண்டும் வரவில்லை. 

இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!

காவல்துறை விசாரணை:

இதனால் பதறிப்போன உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை. பின் இதுகுறித்து கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, மூதாட்டி சோலை பகுதியில் ஆடையின்றி ரத்தகாயத்துடன் சடலமாக இருந்தார்.

காவல்துறை விசாரணை:

இதனையடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணையை முன்னெடுத்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகள், செல்போன் சிக்னல் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

அரங்கேறிய கொடூரம்:

கைதான பெரியகருப்பனிடம் இருந்து மூதாட்டியின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், "ஆண்டிபட்டியை பூர்வீகமாக கொண்ட பெரியகருப்பன், கொடைக்கானலில் உள்ள மேல்மலை புதுப்புத்தூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து விவசாய பணிகளை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் 30ம் தேதி போதையில் மூதாட்டியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

பலாத்காரம் & கொலை:

அங்கு அவரை பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஏற்கனவே மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு ஆண்டிபட்டியில் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் அதே கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் புதுப்புதூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரை வன்கொடுமையும் செய்துள்ளார்.

சைக்கோ? 

சைக்கோவைபோல மூதாட்டியை குறிவைத்து வன்கொடுமை செய்ததை பெரியகருப்பன் வழக்கமாக கொண்டுள்ளார்" என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நெஞ்செல்லாம் பதறுதே.. உடலில் காயங்கள்., ரத்தக்கறையுடன் வீடு திரும்பிய 7 வயது சிறுமி.. தின்பண்டம் ஆசை காட்டி இளைஞர் செய்த கொடூரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #sexual abuse #Rape #Dindigul #மூதாட்டி #தேனி #கொடைக்கானல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story