இதெல்லாம் ஒரு பொழப்பா.? ஜோடிகளை வேவு பார்க்க இளைஞர் செய்த அந்த ஒரு வேலை! பகீர் கிளப்பும் பின்னணி.!!!
கோவை வாலாங்குளம் பகுதியில் மின் கேபிள்களை வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். இரவில் ஜோடிகளை மறைந்திருந்து வேவு பார்க்கும் நோக்கில் மின் இணைப்பை துண்டித்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரையில் மின் கேபிள்களை வெட்டியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரவில் அங்கு வரும் ஜோடிகளை யாருக்கும் தெரியாமல் வேவு பார்க்கும் நோக்கிலேயே மின் இணைப்பை துண்டித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாதுகாவலர்களின் கண்காணிப்பில் சிக்கிய இளைஞர்
குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வாலாங்குளம் பகுதியில் இரவு நேர பாதுகாப்பிற்காக சிறப்புப் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் மின் கேபிள்களை ஒயர் கட்டர் மூலம் வெட்டிக் கொண்டிருந்ததை அவர்கள் கவனித்துள்ளனர். பாதுகாவலர்களைக் கண்டதும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மீண்டும் வந்தபோது கைது
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதே பகுதியில் மீண்டும் வந்த அந்த இளைஞர், இருட்டான இடத்தில் பதுங்கியிருந்தபோது பாதுகாவலர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், கைது செய்யப்பட்டவர் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரசாத் என்பது தெரியவந்தது.
விசாரணையில் வெளியான தகவல்
போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரங்களில் அங்கு வரும் ஜோடிகளை மறைந்திருந்து வேவு பார்ப்பது தனது வழக்கம் என்றும், தன்னை யாரும் கவனிக்காத வகையில் அந்த பகுதி இருட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மின் கேபிள்களை வெட்டியதாக பிரசாத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து Police Arrest நடவடிக்கையின் கீழ் அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த பைக், ஐபோன் மற்றும் ஒயர் கட்டர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கரண்டு கட்டும்.. கள்ளக்காதல் ஜோடி ஜல்சாவும்.. குளக்கரையில் அரங்கேறும் கூத்து.. வேடிக்கை பார்த்து ரசித்த இளைஞர்.!