×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்.. விரட்டிக்கடித்த ஊர்க்காவலன் 'நாய்'.. கோவையில் சம்பவம்.! 

Woman Attacked at Night in Coimbatore: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை நாய் கடித்தது. 

Advertisement

பெண் தனியாக இருப்பதை அறிந்து அத்துமீற முயன்ற நபரை, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நாய் கடித்து விரட்டிவிட்டு சம்பவம் நடந்துள்ளது. 

இளம்பெண்: 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில், டீக்கடைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, இரவு நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் உறங்குவதை கண்டுள்ளனர். 

இதையும் படிங்க: காதலனின் கடனை அடைக்க கொள்ளைக்காரியாக மாறிய சிந்து.. கோவையில் நடந்த திடுக் சம்பவம்..! 

பாலியல் தொல்லை: 

அச்சமயம் போதையில் வந்த இளைஞர் ஒருவர், பெண்ணிடம் பேச்சு கொடுத்து பின் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதை கண்டுள்ளனர். மேலும், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த தெருநாய்கள் இளைஞரை விரட்டியதும், ஒரு நாய் ஒன்று இளைஞரை கடித்தது போன்றதுமான காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

சிறுவன்: 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், நேரில் சென்று விசாரித்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதியானது. பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுவனை கைது செய்தனர். சமபவத்தன்று சிறுவன் போதையில் இருந்தது தெரியவந்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: "நான் சரி செய்கிறேன்" - திருமண தடையை நீக்குவதாக ஜோதிடரின் அதிர்ச்சி செயல்.. பெண் பரபரப்பு புகார்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #cctv #17 year old Boy #Sexual Harassment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story