×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான் சரி செய்கிறேன்" - திருமண தடையை நீக்குவதாக ஜோதிடரின் அதிர்ச்சி செயல்.. பெண் பரபரப்பு புகார்.! 

Coimbatore News: திருமணத்துக்கு இடையூறாக இருக்கும் தடையை சரிசெய்வதாக பெண்ணை வன்கொடுமை செய்த ஜோதிடர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஜோதிடர் மீது பெண் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புகார்: 

திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர், கோயம்புத்தூரில் வசித்து வரும் பிரபல ஜோதிடரின் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கோயம்புத்தூர் சரக காவல் ஐ.ஜியிடம் இவர் இதுதொடர்பாக அளித்துள்ள புகாரில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "எனது பெற்றோர் திருமணத்துக்காக பல ஆண்டுகளாக வரன் பார்த்தும் சரிவர எதுவும் அமையவில்லை. 

இதையும் படிங்க: பள்ளி மாணவியுடன் காதல்.. சிறுமியை தேடி வந்த காதலன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்.! 

பரிகாரம்: 

எனக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என பல பரிகாரங்களும் செய்து வந்தேன். திருமணத்துக்கு சரியான வரன் கிடைக்காமல் பெற்றோர் துயரத்தில் இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஜோதிடரின் அறிமுகம் ஏற்பட்டது. இவர் சில பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறினார். 

பாலியல் பலாத்காரம்: 

பலமுறை என்னை நேரில் அழைத்து பேசியவர், ஒருகட்டத்தில் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அவர் திருமணம் செய்வார் என நம்பினேன். மேலும், கடன் பிரச்சனை இருப்பதாக திருமணத்துக்கு நான் சேமித்து வைத்த தொகையை வாங்கினார். உறவினர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதாக கூறி ரூ. 1.5 லட்சம் வாங்கினார். 

மிரட்டல்: 

பின் என்னுடன் பேசுவதை திடீரென அவர் நிறுத்திய நிலையில், அவர் குறித்து தீர விசாரித்தபோது அவருக்கு திருணம் முடிந்தது தெரியவந்தது. இந்த உண்மை குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுகிறார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பெண் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

 
 

 

 

இதையும் படிங்க: 7 பேரால் 13 வயது சிறுமி பலாத்காரம்.. சகோதரர், காதலன் என பீர் குடிக்கவைத்து நேர்ந்த கொடுமை.. சேலத்தில் பேரதிர்ச்சி.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #Coimbatore #Astrologer Rapes #Marriage Obstacles
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story