×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லூரி மாணவனை கடத்தி ஆயுதங்களால் தாக்குதல்! விடுதியில் வீசிவிட்டு சென்ற கொடூரம்! கொலையின் நிஜ பின்னணி என்ன? கதறும் பெற்றோர்...!!!

கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அவர், நண்பருடன் கல்லூரிக்குச் சென்றபோது வழிமறித்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் 5 பேரை செட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வழிமறித்து கடத்தி ஆயுதங்களால் தாக்குதல்

மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த அமுதன், தனது நண்பர் ஸ்ரீமனுடன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். பின்னர் அமுதனை மட்டும் கடத்திச் சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்! தூங்கி கொண்டிருந்த இளைஞர்கு நேர்ந்தது பயங்கரம்.... அலறி துடித்த பெற்றோர்! குலை நடுங்க வைக்கும் சம்பவம்...!!!

தாக்குதலுக்குப் பிறகு அமுதனை விடுதி அறையில் வீசிவிட்டு அந்த மாணவர்கள் சென்றுள்ளனர். மதிய உணவு இடைவேளையில் அறையில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மற்ற மாணவர்கள் பார்த்தனர். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவை மாணவர் கொலை வழக்கில் ஆராமுதன், அரவிந்த், சிவரோகித், மணி பாலு மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு பிரச்சினையில் மோதல்

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 9-ம் தேதி நடந்ததாக கூறப்படும் செல்போன் பறிப்பு சம்பவம் முக்கிய காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் முகமூடி அணிந்து சென்று, நான்காம் ஆண்டு மாணவர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி விலையுயர்ந்த செல்போன்களை பறித்ததாக கூறப்படுகிறது.

அந்த கும்பலில் இருந்த அமுதனின் முகமூடி எதிர்பாராதவிதமாக விலகியதால், அவரை சீனியர் மாணவர்கள் அடையாளம் கண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அமுதனை பிடித்து விசாரித்தபோது அவரை கொடூரமாக தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செல்போன் பறிப்பு தொடர்பாக 9 மாணவர்கள் மீது தனியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர் முன்வைக்கும் வேறு குற்றச்சாட்டு

ஆனால், அமுதனின் பெற்றோர் போலீசார் கூறும் காரணத்தை ஏற்கவில்லை. கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை அமுதன் வெளியில் தெரிவித்ததால், அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் வழக்கில் புதிய சந்தேகங்களும் எழுந்துள்ளன. ஒருபுறம் செல்போன் பறிப்பு விவகாரத்தை கொலைக்கான காரணமாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், மறுபுறம் போதைப்பொருள் தொடர்பான பெற்றோரின் குற்றச்சாட்டும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு கோணங்களிலும் கொலை வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: சொந்த காசை போட்ட அதிகாரிகளுக்கு எல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்! பறந்தது அதிரடி உத்தரவு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கோவை மாணவர் கொலை #Engineering College Murder #அமுதன் கொலை #Coimbatore Crime #செட்டிபாளையம் போலீஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story